எல்லாரும் தோனியாகிட முடியாது, சச்சினே 5 டைம் தோத்துட்டாரு – விராட், ரோஹித் விமர்சனங்களுக்கு அஷ்வின் பதிலடி

Ashwin
- Advertisement -

கடந்த 2013ஆம் ஆண்டு கடைசியாக எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா அதன் பின் கடந்த 9 வருடங்களில் நடைபெற்ற ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெளியேறியது. குறிப்பாக இருதரப்பு தொடர்களை வென்ற விராட் கோலி உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களால் கடந்த 2021 டி20 உலக கோப்பையுடன் படிப்படியாக சர்ச்சைக்குரிய வகையில் கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்தார். அவருக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மா பொறுப்பேற்று வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்று டி20 தர வரிசையில் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேற்றினார்.

Kohli-and-Rohit

ஆனால் அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறியது. இதனால் கேப்டன்கள் மாறியும் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற நிலைமை இருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. அதனால் அதிருப்தியடைந்த பிசிசிஐ ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் அவர்களுக்கு டாட்டா காட்டி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய கிரிக்கெட் அணியை உருவாக்கும் வேலைகளை துவங்கியுள்ளது.

- Advertisement -

அஷ்வின் பதிலடி:
அத்துடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை ஆகிய 2 தொடர்கள் ரோகித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பாக பிசிசிஐ கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் அவர் வெற்றியை பதிவு செய்ய தவறும் பட்சத்தில் அடுத்த வருடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என்று தெரிய வருகிறது. இந்நிலையில் எம்எஸ் தோனி கேப்டனாக தம்முடைய முதல் உலகக் கோப்பையிலேயே சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார் என்பதற்காக அடுத்த வரும் கேப்டன்களும் அதையே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது எதார்த்த வாழ்க்கையில் நடைபெறாத ஒன்று என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

Dhoni world cup

அதே போல் தம்முடைய கனவான உலகக் கோப்பை வெல்வதற்கு சச்சின் டெண்டுல்கர் 6 முறை காத்திருந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் அதை வெல்லவில்லை என்று சொல்வது மிகவும் சுலபமாகும்.1983 உலகக் கோப்பைக்கு பின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1992, 1996, 1999, 2003, 2007 உலகக் கோப்பைகளில் விளையாடினார். ஆனால் அவரால் 2011இல் கடைசி முயற்சியில் தான் வெல்ல முடிந்தது. அவர் உலகக்கோப்பை வெல்வதற்கு 6 முறை காத்திருந்து கடைசியாக வென்றார்”

- Advertisement -

“அத்துடன் மற்றொரு ஜாம்பவான் எம்எஸ் தோனி வந்ததும் முதல் வருடத்திலேயே உலகக் கோப்பையை வென்று அசத்தலாக செயல்பட்டார் என்பதற்காக எஞ்சிய கேப்டன்கள் தலைமையிலும் அதுவே நடைபெறும் என்று சொல்ல முடியாது அல்லவா? மேலும் ரோகித் சர்மா விராட் கோலி, ஆகியோர் 2007 உலக கோப்பையில் விளையாடவில்லை. ரோஹித் சர்மா 2011 உலகக்கோப்பை விளையாடவில்லை. 2011, 2015, 2019 உலக கோப்பையில் விளையாடிய விராட் கோலி தற்போது தன்னுடைய 4வது உலக கோப்பையில் விளையாட உள்ளார்”

Ashwin

“மேலும் நிறைய பேர் விராட் கோலி எந்த உலகக் கோப்பையும் வெல்லவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார். ரோஹித் சர்மாவும் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார். எனவே அவர்களுக்கு நாம் சற்று இடைவெளி கொடுக்க வேண்டும். அவர்கள் இருதரப்பு, ஐபிஎல் உள்ளிட்ட நிறைய போட்டிகளில் விளையாடி வெற்றியும் காண்கிறார்கள். மேலும் ஐசிசி தொடரில் முக்கிய தருணங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்தால் மட்டுமே வெற்றி காண முடியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: என்னை கேட்டா தீபக் ஹுடாவிற்கு பதிலா அவரை விளையாட வையுங்க. அதுதான் கரெக்ட் – தினேஷ் கார்த்திக் கருத்து

அதாவது என்னதான் தரமான கேப்டனாக இருந்தாலும் முக்கிய தருணங்களில் சற்று அதிர்ஷ்டமும் கை கொடுத்தால் மட்டுமே உலக கோப்பை வெல்ல முடியும் என்று தெரிவிக்கும் அஸ்வின் ரோஹித், விராட் கோலி முக்கிய வீரர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement