என்னை கேட்டா தீபக் ஹுடாவிற்கு பதிலா அவரை விளையாட வையுங்க. அதுதான் கரெக்ட் – தினேஷ் கார்த்திக் கருத்து

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளதால் இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் பின்தங்கியுள்ளது. அதே வேளையில் ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக தற்போது டி20 தொடரை நியூசிலாந்து அணி அமர்க்களமாக துவங்கியுள்ளது.

IND-vs-NZ

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று லக்னோ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இந்திய அணியால் சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதே வேளையில் இன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் தொடரை இழக்கவும் நேரிடும்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியில் சரியான மாற்றங்களை கொண்டு வந்து அணியை பலப்படுத்த வேண்டும் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்திய டி20 அணியில் தீபக் ஹூடாவிற்கு பினிஷர் ரோலை கொடுத்திருக்கக் கூடாது என்றும் அவரை மூன்றாவது இடத்தில் களமிறக்கி விட்டு பின் வரிசையில் ஜித்தேஷ் ஷர்மாவை சேர்க்க வேண்டும் என்றும் இந்திய அணி நட்சத்திர ஆட்டக்காரரான தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தீபக் ஹூடா என்னை பொறுத்தவரை ஃபினிஷர் ரோலில் விளையாடி பழக்கப்பட்டவர் கிடையாது.

Jitesh Sharma

அவர் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அவரால் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடி எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்க முடியும். ஆனால் அவர் தற்போது பின்வரிசையில் விளையாடுவதால் அவரது இயல்பான ஆட்டத்தை விளையாட முடியாமல் தவிக்கிறார். அதே வேளையில் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் ஜித்தேஷ் ஷர்மாவை இறக்கினால் நிச்சயம் அவர் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

- Advertisement -

ஏனெனில் ஜித்தேஷ் ஷர்மா கடந்த பல ஆண்டு காலமாக உள்ளூர் தொடரிலும் சரி, அவர் விளையாடிய அணிகளிலும் சரி ஆறாவது ஏழாவது இடத்தில் இறங்கி அதிரடி காட்டியுள்ளார். அதேபோன்று இக்கட்டான சூழ்நிலையும் எவ்வாறு கையாண்டு அதிரடியை வெளிப்படுத்த வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். எனவே தீபக் ஹூடாவை மூன்றாவது இடத்தில் பயன்படுத்திவிட்டு நிச்சயம் பின் வரிசையில் அவரை களமிறக்க வேண்டும் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நாம ஒன்னும் பலவீனமான டீம் கிடையாது, 2023 உ.கோ வெல்ல அதை செஞ்சா போதும் – இந்திய அணிக்கு கங்குலி ஆலோசனை

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது உள்ள டி20 அணியில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில் எந்த ஒரு வீரருக்கும் சரியான நிலையான பேட்டிங் ஆர்டர் இல்லாமல் இருப்பது போல் தெரிகிறது. விரைவில் இந்திய அணியின் ஒவ்வொரு பேட்டிங் பொசிஷனுக்கும் சரியான வீரர்களை உறுதி செய்ய வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement