நாம ஒன்னும் பலவீனமான டீம் கிடையாது, 2023 உ.கோ வெல்ல அதை செஞ்சா போதும் – இந்திய அணிக்கு கங்குலி ஆலோசனை

Ganguly
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடர்களை வென்று உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ளது. இதனால் 2011க்குப்பின் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையை வென்று 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 2015, 2019 உலகக் கோப்பைகளை வென்ற அணிகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்று அசத்தின.

INDia

- Advertisement -

அந்த வரிசையில் இம்முறை இந்தியா கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அதற்கான நம்பிக்கை இந்திய ரசிகர்களிடம் குறைவாகவே காணப்படுகிறது. ஏனெனில் 2013க்குப்பின் பெரும்பாலான ஐசிசி தொடர்களில் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்ட இந்தியா நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு முக்கிய தருணத்தில் சொதப்பி வெளியேறியது. விராட் கோலி தலைமையில் தான் அந்த நிலைமை என்று பார்த்தால் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையிலும் 2022ஆம் ஆண்டு இருதரப்பு தொடர்களை வென்று டி20 தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியா அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வழக்கம் போல தோல்வியையே சந்தித்தது.

கங்குலி ஆலோசனை:
போதாக்குறைக்கு பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் அடிக்கடி காயமடைந்து வெளியேறுவது இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படுத்தி வருகிறது. அது போக தரமான வீரர்களை கண்டறியும் சோதனை என்ற பெயரில் ராகுல் டிராவிட் – ரோஹித் சர்மா ஆகியோர் அடிக்கடி மாற்றங்களை செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதனால் இது வரை நிலையான 11 பேர் தொடர்ந்து செட்டிலாகி விளையாடவில்லை என்பதும் இந்திய ரசிகர்களுக்கு கவலையளிக்கும் ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் இந்தியா பலவீனமான அணி இல்லை என்றாலும் அடிக்கடி மாற்றங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.

IND-vs-NZ

குறிப்பாக வீரர்களுக்கு நிலையான வாய்ப்பு கொடுத்து வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் பயமின்றி அதிரடியாக விளையாடினால் வெற்றி தாமாக வரும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்தியா எப்போதும் பலவீனமான அணி கிடையாது. ஏனெனில் ஏராளமான திறமை கொண்ட நமது நாட்டில் உள்ள அணி எப்போதும் பலவீனமாக இருக்க முடியாது. சொல்லப்போனால் இங்கு பாதிக்கும் மேற்பட்ட தரமான நிறைய வீரர்கள் விளையாடுவதற்கு வாய்ப்பை கூட பெறுவதில்லை”

- Advertisement -

“எனவே உலகக் கோப்பை வரை ஒரே அணியை தேர்ந்தெடுத்து வாய்ப்பு கொடுக்குங்கள் என்பதே ராகுல் டிராவிட், ரோகித் சர்மா மற்றும் தேர்வு குழுவினர் ஆகியோருக்கு நான் வைக்கும் கோரிக்கையாகும். மேலும் இந்திய அணி உலக கோப்பைக்கு சென்றவுடன் பளு இல்லாமல் விளையாட வேண்டும். அதாவது கோப்பையை வெளியேறுமா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் அவர்கள் பயமின்றி விளையாட வேண்டும். மேலும் நமது அணியில் உள்ள ரோஹித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷமி ஆகியோரும் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கம்பேக் கொடுத்தாலும் எப்போதும் மோசமாக செயல்பட மாட்டார்கள்” என்று கூறினார்.

Ganguly-2

அவர் கூறுவது போல வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுவதை விட பயமின்றி மிகச் சிறப்பாக விளையாடினால் வெற்றி தாமாக வரும் என்பதே நிதர்சனமாகும். குறிப்பாக சமீப காலங்களில் ஐசிசி தொடர்களில் இந்திய அணியினர் பயத்துடன் தடவலாக விளையாடியதே தோல்விக்கு முக்கிய காரணம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். எனவே நிலையான அணியுடன் பயமின்றி விளையாடினால் உலக கோப்பை நிச்சயமாக வெல்ல முடியும் என்று தெரிவிக்கும் கங்குலி ரிஷப் பண்ட் காயம் பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: IND vs NZ : 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் – பிளேயிங் லெவன் லிஸ்ட் இதோ

“டெல்லி அணியில் இது எனக்கு ஒரு மற்றொரு வேலையாகும். முதல் முறையாக 2019இல் அந்த அணியில் இணைந்தது முதல் அதை சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். இந்த சீசனில் இந்தியாவின் டாப் வீரரான ரிஷப் பண்ட் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாகும். இருப்பினும் நாம் காயமடைந்ததால் நாம் எதுவும் செய்ய முடியாது” என்று கூறினார்.

Advertisement