ஆஸியிடம் அந்த வம்சாவளி இருக்கு.. அதை மறந்து கனவு காணாதீங்க இந்தியா.. எச்சரித்த இயன் பிஷப்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மாபெரும் இறுதி போட்டி வரும் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. அதில் செமி ஃபைனல் சுற்றில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இவ்விரு அணிகளை பொறுத்த வரை ஆஸ்திரேலியாவை ஏற்கனவே இத்தொடரின் லீக் சுற்றில் 199 ரன்களை சேசிங் செய்கையில் 2/3 என்ற சரிவை சந்தித்தும் தோற்கடித்த விராட் கோலி – ராகுல் ஆகியோரின் ஆட்டத்தால் வீழ்த்திய இந்தியா எஞ்சிய அனைத்து எதிரணிகளையும் துவம்சம் செய்தது. மேலும் தற்போதைய அணியில் ரோகித் முதல் ஷமி வரை அனைவருமே உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் நிச்சயமாக 2011 போல கோப்பையை வெல்லும் என்ற கனவுடன் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

எச்சரித்த பிஷப்:
இந்நிலையில் தற்சமயத்தில் இந்தியா வெல்வதற்கு அதிக வாய்ப்பிருந்தாலும் ஐசிசி உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த வரலாற்றையும் வம்சாவளியையும் கொண்ட ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் எச்சரித்துள்ளார். எனவே இந்தியா வெற்றி காண எந்த இடத்திலும் தடுமாறாமல் சிறப்பாக விளையாட வேண்டுமென கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“இந்த 2 அணிகளில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடி உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறது. மறுபுறம் ஆஸ்திரேலியா உச்சக்கட்ட ஃபார்மை தொடுவதற்கு பார்க்கிறது. இப்படிப்பட்ட இரு அணிகள் மோதுவது இருநாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய கனவாகும். அதே சமயம் என்னைப் போன்ற பொதுவான நபர்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய என்டர்டைன்மென்ட் இருக்கும்”

- Advertisement -

“தற்சமயத்தில் இந்தியா பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றில் கொண்டிருக்கும் ஃபார்ம் ஃபைனலில் நிச்சயம் வெல்லும் என்பதை பரிந்துரைக்கும். ஆனால் ஆஸ்திரேலிய அணியை பற்றி மற்றுமொரு முறை சொல்கிறேன் அவர்கள் சாம்பியன்ஷிப் சொல்வதில் வம்சாவளியை கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களை நீங்கள் போட்டியிலிருந்து வெளியே எடுத்து குறைத்து மதிப்பிட முடியாது. அந்த வகையில் மிகவும் சவாலாக இருக்கப்போகும் இந்த போட்டியில் 2 சிறந்த அணிகள் மோதுகின்றன” என்று கூறினார்.

இதையும் படிங்க: விராட், ரோஹித் மாதிரி சோசியல் மீடியா ஃபேன்ஸ் இல்லாததால் யாரும் அவரை பாராட்டுவதில்லை.. கம்பீர் ஆதங்கம்

அவர் கூறுவது போல 1975, 1987, 1996, 1999, 2003, 2007, 2015, 2023* என உலகிலேயே அதிகபட்சமாக 8 ஃபைனலுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ள ஆஸ்திரேலியா ஏற்கனவே 5 கோப்பைகளை வென்றுள்ளது. சொல்லப்போனால் இந்த தொடரில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து புள்ளில்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய அந்த அணி செமி ஃபைனல் வராது என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதன் பின் அசத்தி ஃபைனலுக்கு வந்துள்ளது. எனவே 91/7 என ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சரிந்தும் வெற்றி கண்ட மன உறுதியை கொண்ட ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்தியா குறைத்து மதிப்பிடாமல் சிறப்பாக விளையாடுவது அவசியமாகும்.

Advertisement