- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலிக்கு பதிலா அந்த இளம்வீரரை துவக்கவீரரா விளையாட வையுங்க – இயான் பிஷப் விருப்பம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடியிருந்தனர்.

இதன் காரணமாக தற்போது இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மிகச் சிறப்பான ஃபார்மில் இருந்து வந்த ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரின் போது பார்மை இழந்து தடுமாறினார்.

- Advertisement -

அதோடு ஐ.பி.எல் தொடரின் நடுப்பகுதியில் அவர் மீண்டும் பார்மிற்கு திரும்பினாலும் கடைசியில் அவரால் இந்த தொடரை சரியாக முடிக்க முடியவில்லை. இதன் காரணமாக தற்போது ஜெய்ஸ்வாலை வெளியில் அமர வைத்துவிட்டு இந்திய அணி ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோருடன் சென்றுள்ளது.

இந்நிலையில் தற்போதைய டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் விளையாடுவதற்கு போதுமான பார்ம் இருப்பதாக நம்புவதாகவும் இந்திய அணி ஜெய்ஸ்வாலை துவக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்றும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரரான இயான் பிஷப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரின் போது ஜெய்ஸ்வாலின் பார்ம் சற்று கவலை தரும் விதமாக இருந்தது உண்மைதான். ஆனால் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடக்கூடிய அளவிற்கு அவர் தகுதியுடன் இருப்பதாக நினைக்கிறேன். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்.

இதையும் படிங்க : வெறும் 2 ரன்ஸ்.. வரலாறு படைத்த உகாண்டா.. 27 வருட கனவை நிஜமாக்கி புதிய உலக சாதனை படைத்த 43 வயது வீரர்

அதனால் விராட் கோலிக்கு பதிலாக அவர் துவக்க வீரராக விளையாட வேண்டும். இந்திய அணியின் துவக்க வீரராக ஒரு இடதுகை ஆட்டக்காரர் இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும் என்றும் இயான் பிஷப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -