
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் காரணமாக அவருக்கு பதிலாக 26 வயதான இளம்வீரர் சுப்மன் கில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி இங்கிலாந்து தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது.
அந்த இங்கிலாந்து தொடரில் 750 ரன்களுக்கு மேல் குவித்து அசத்திய அவர் கேப்டனாகவும் சிறப்பாகவே செயல்பட்டிருந்தார். அதற்கடுத்து தற்போது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் முறையாக இந்தியாவில் தனது டெஸ்ட் கேப்டன்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் சுப்மன் கில் இரண்டாவது போட்டியின் போது சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். அதேபோன்று இந்த தொடரின் முதல் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற கில் முதல் 2 டெஸ்ட் தொடர்களிலும் அசத்தலான கேப்டன்சியை வெளிப்படுத்திய அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் இன்னும் முழுமை அடையவில்லை என் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயான் பிஷப் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது :
கேப்டனாக இன்னும் சுப்மன் கில் வளருவார். ஆனால் கில் இன்னும் முழுமை பெறவில்லை. கில்லுக்கு ஒரு டெஸ்ட் அணியை வழிநடத்தும் பொறுமை இருக்கிறது. ஆனால் கேப்டனாக முக்கிய யுக்திகளை களத்தில் பயன்படுத்தும் அனுபவத்தை பெறுவதற்கு இன்னும் இரண்டு சீசன்கள் தேவைப்படும். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரிடம் இருந்து அவர் அதை கற்றுக்கொள்வார் என்று நினைக்கிறன்.
இதையும் படிங்க : அகார்கர் என்கிட்ட வந்து பேசக்கூட இல்ல.. அப்புறம் எப்படி இப்படி சொல்லலாம் – முகமது ஷமி ஆதங்கம்
அவர் ஒரு கேப்டனாகவும், சிறந்த பேட்ஸ்மேனாக வளர கொஞ்சம் நேரமும் வாய்ப்பும் தேவை என இயான் பிஷப் தெரிவித்துள்ளார். இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியிருக்கிறது. அந்த அணிக்கும் சுப்மன் கில் தான் புதிய ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.