இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த பல மாதங்களாகவே இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பதற்காக காத்திருந்தார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத அவர் தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை .இதன் காரணமாக முகமது ஷமியின் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வரலாம் என்று தெரிகிறது.
யாரும் என்கிட்ட வந்து பேசவில்லை : முகமது ஷமி
இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த அவர் காயம் காரணமாக அவ்வப்போது வாய்ப்பை இழந்து வந்த வேளையில் தற்போது மீண்டும் முழு உடற்தகுதியுடன் இருந்தும் இந்திய அணி அவரை தேர்வு செய்யாமல் மறுத்து வருவது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ள முகமது ஷமி சில முக்கியமான விடயங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 ஐபிஎல் தொடர் மற்றும் துலீப் டிராபி என அனைத்து போட்டிகளிலும் விளையாடினேன்.
தற்போது கூட நான் நல்ல டச்சில் தான் இருக்கிறேன். இதற்கு மேல் இந்திய அணியில் இடம்பெற நான் என்ன செய்ய வேண்டும்? என்னை பற்றிய அப்டேட் வேண்டுமென்றால் தேர்வுக்குழுவினர் தான் என்னிடம் கேட்க வேண்டும். அப்படி அகார்கரோ அவர்களது நிர்வாகிகளோ யாரும் என்னிடம் வந்து எதுவும் கேட்கவில்லை.
அவர்களுக்கு அப்டேட் வழங்குவது என் வேலை கிடையாது. என்னை பற்றி அவர்கள் தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் முகமது ஷமி காட்டமாக பேசியிருந்தார். ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது ஷமி தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய அகார்கர் : ஷமி குறித்த எந்த ஒரு அப்டேட்டும் எங்களிடம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : இந்த ஜென்டில்மேன் பண்பு இந்தியாவுக்கு எங்க தெரியப்போகுது.. நேரலையில் குத்திக் காட்டிய ரமீஸ் ராஜா
அவரது இந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் முகமது ஷமி இந்த காட்டமான கருத்தினை தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக பல ஆண்டுகள் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்த அவருக்கு இந்திய அணியின் நிர்வாகம் உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.



