சிஎஸ்கே தல தோனியின் வளர்ப்பு சும்மா போகுமா, வங்கதேசத்தை திணறடித்த இளம் இலங்கை வீரர் – பாராட்டிய இயன் பிஷப்

Ian Bishop
- Advertisement -

கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற்ற 2வது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதின. பல்லேக்கேல் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் தங்களுடைய சொந்த மண்ணில் களமிறங்கிய இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்திற்கு முகமத் நைம் 16, டைஜுல் ஹசன் 0 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

அந்த நிலைமையில் வந்த கேப்டன் சாகிப் அல் ஹசன் இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதிசா பதிரனா வேகத்தில் வெறும் 5 (11) ரன்களில் அவுட்டாகி பரிதாபமாக சென்றார். அதனால் 36/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற வங்கதேசத்தை மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய நஜ்முல் சாண்டோ நிதானமாக செயல்பட்டு காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஹ்ரிடோய் 20 (41) ரன்களில் கேப்டன் சனாக்கா வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

பிஸப் பாராட்டு:
அந்த நிலைமையில் வந்து நங்கூரத்தை போட முயற்சித்த மற்றொரு நட்சத்திர சீனியர் வீரர் முஸ்பிக்கர் ரஹீம் 13 (22) ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாக்கிய பதிரான செட்டிலாக விடாமல் பெவிலியன் அனுப்பி வைத்தார். அதனால் மேலும் சரிந்த வங்கதேசத்திற்கு அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக மறுபுறம் போராடிய நஜ்முல் சாண்டோவும் 7 பவுண்டரியுடன் 89 (122) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவர்கள் வரை தாக்கு பிடிக்காத அந்த அணியை 42.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு சுருட்டிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதிசா பதிரனா 4 விக்கெட்டுகளையும் மஹீஸ் தீக்சனா 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

ஐபிஎல் தொடரில் இந்த வருடம் சாம்பியன் பட்டம் என்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியில் விளையாடும் இந்த 2 வீரர்களில் பதிரனா முன்னாள் இலங்கை ஜாம்பவான் வீரர் லசித் மலிங்கா போல வித்தியாசமான ஸ்லிங்கா பவுலிங் ஆக்சனை பயன்படுத்தி மிகச்சிறப்பாக பந்து வீசி வெற்றியில் பங்காற்றினார். முதலில் நெட் பவுலராக விளையாடி கடந்த வருடம் ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு பெற்று அசத்திய அவர் இந்த வருடம் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை 8.01 என்ற எக்கனாமியில் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

குறிப்பாக டெத் ஓவர்களில் துல்லியமான யார்கர் பந்துகளால் திணறடித்த அவருக்கு தோனி அதிகப்படியான ஆதரவுகளை கொடுத்து போட்டிகளின் முடிவில் வெளிப்படையாக பாராட்டி வந்தார். அதனால் இலங்கைக்கு வருங்கால வைரத்தை தோனி பட்டை தீட்டி வருவதாக பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே பாராட்டியிருந்தார். அதை உண்மைப்படுத்தும் வகையில் தோனி தலைமையில் ஐபிஎல் தொடரில் அசத்திய பதிரனா அதே ஃபார்மில் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs PAK : சுப்மன் கில் வேனாம். அவரை விளையாட வையுங்க. அதுதான் கரெக்ட்டா இருக்கும் – சஞ்சய் பாங்கர் கருத்து

இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “மதிசா பதிரானாவை ஏன் இலங்கை அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் அதிக மதிப்பீடுகிறார்கள் என்பதை எளிதாக பார்க்க முடிகிறது. இப்போதும் அவர் கற்றுக்கொண்டு தான் இருக்கிறார். இருப்பினும் விரைவாக கற்றுக் கொள்ளும் அவர் வருங்காலங்களில் இன்னும் அசத்துவார்” என்று கூறியுள்ளார்.

Advertisement