சாரி விராட் கோலி பற்றி அப்படி வர்ணித்திருக்கக் கூடாது.. ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட இயன் பிஷப்

Ian Bishop 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தோல்விக்கு விராட் கோலி தான் காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இத்தனைக்கும் 5 போட்டிகளில் 316* ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ள அவர் சிறப்பாக விளையாடியும் இந்த அவப்பெயருக்கு ஆளாகியுள்ளது ஆர்சிபி ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

குறிப்பாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வழக்கம் போல நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 12 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 113* (72) ரன்களை 156.94 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். ஆனால் டு பிளேஸிஸ் 44, மேக்ஸ்வெல் 1, சௌரவ் சௌஹான் 9, கேமரூன் க்ரீன் 5* என பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

- Advertisement -

ரசிகரிடம் மன்னிப்பு:
அதே போல 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஜோஸ் பட்லர் 100* (58) சஞ்சு சாம்சன் 69 (42) ரன்கள் அடித்து எளிதாக வெற்றியை பறிக்கும் அளவுக்கு ஆர்சிபி பவுலர்கள் சுமாராக பந்து வீசினார்கள். ஆனால் 67 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு ஐபிஎல் வரலாற்றின் மெதுவான சதத்தை அடித்த காரணத்தால் விராட் கோலி தான் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் உச்சகட்டமாக காணப்படுகிறது.

இந்நிலையில் அந்த போட்டியில் 39 பந்துகளில் 50 ரன்களை தொட்ட போது பிரபல வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயன் பிஷப். “விராட் கோலி வெறும் 39 பந்துகளில் அரை சதமடித்துள்ளார்” என்று ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் வர்ணித்தார். அதை கேட்ட ஒரு ரசிகர் ஒருநாள் கிரிக்கெட்டில் 39 பந்துகளில் 50 ரன்கள் அடிப்பது வேண்டுமானால் சிறப்பானது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் வெறும் 39 பந்துகளில் 50 ரன்கள் அடிப்பது எப்படி சிறப்பாக முடியும் என்று ட்விட்டரில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

எனவே “நீங்கள் என்னை உங்களுடைய வர்ணனையால் ஏமாற்றி விட்டீர்கள்” என இயன் பிஷப்பை டேக் செய்து அந்த ரசிகர் ட்விட்டரில் பதிவிட்டார். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இயன் பிஷப் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளது பின்வருமாறு. “அதற்காக நான் தோல்வியை எடுத்துக் கொள்கிறேன். டி20 பேட்டிங் என்றால் என்ன என்பதை நான் நன்கு அறிவேன்”

இதையும் படிங்க: அவர் தான் அந்த பிளான் போட்டு கொடுத்தாரு.. சதமடித்த உதவிய ஹெட்மயர் பற்றி பட்லர் நெகிழ்ச்சி

“இருப்பினும் அந்த வார்த்தையில் என்னுடைய செருகல் தவறானது. ஃபார்மட்டுக்கு ஏற்ப எனது வார்த்தைகள் மற்றும் மொழியின் தேர்வு இன்னும் துல்லியமாக இருக்க வேண்டும். எனவே நான் முன்னோக்கி செல்ல வேண்டும். மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அதை பார்க்கும் மற்ற ரசிகர்கள் “இதற்கெல்லாம் ஏன் சார் மன்னிப்பு கேட்கிறீர்கள்” என்று அவரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement