அவர் தான் அந்த பிளான் போட்டு கொடுத்தாரு.. சதமடிக்க உதவிய ஹெட்மயர் பற்றி பட்லர் நெகிழ்ச்சி

Jos Buttler 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் 4 வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ள அந்த அணி 2008க்குப்பின் கோப்பையை வெல்லும் பயணத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. குறிப்பாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அட்டகாசமான வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 113*, கேப்டன் டு பிளேஸிஸ் 44 ரன்கள் எடுத்த உதவியுடன் 184 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் 9 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 100* (58) ரன்களும் கேப்டன் சஞ்சு சாம்சன் 69 (42) ரன்களும் எடுத்து 19.1 ஓவரில் எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ஹெட்மயர் உதவி:
முன்னதாக சமீபத்திய போட்டிகளில் தடுமாறி வந்த ஜோஸ் பட்லர் இப்போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கினார். ஆனாலும் கடைசி நேரத்தில் வந்த சிம்ரோன் ஹெட்மயர் 11* (6) ரன்கள் அடித்ததால் கடைசி 6 பந்துகளில் ராஜஸ்தானின் வெற்றிக்கு வெறும் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் 94 ரன்களில் இருந்த பட்லர் சதத்தை அடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கேமரூன் கிரீன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே டீப் மிட் விக்கெட் திசையில் அட்டகாசமான சிக்சரை பறக்க விட்ட பட்லர் தன்னுடைய 6வது ஐபிஎல் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக தன்னுடைய 100வது ஐபிஎல் போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் படைத்த அவர் ராஜஸ்தானுக்கு அதிக ஆட்டநாயகன் (11) விருது வென்ற வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.

- Advertisement -

இந்நிலையில் அந்த தருணத்தில் சிக்ஸர் அடிப்பதற்கு ஹெட்மயர் செய்த உதவி பற்றி ஜோஸ் பட்லர் போட்டியின் முடிவில் நெகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு. “அந்த சிக்சரை விட என்னுடைய சதத்தை ஹெட்மயர் கொண்டாடியது சிறப்பாக இருந்தது. உண்மையாக அவர் தான் நீங்கள் ஒரு சிக்சர் அடிக்க வேண்டும். எனவே ஸ்டம்புகளுக்கு குறுக்கே சென்று பந்தை அந்த பகுதியில் அடியுங்கள் என்று என்னிடம் சொன்னார்”

இதையும் படிங்க: அவர் தான் அந்த பிளான் போட்டு கொடுத்தாரு.. சதமடித்த உதவிய ஹெட்மயர் பற்றி பட்லர் நெகிழ்ச்சி

“சில நேரங்களில் கிரிக்கெட்டில் விளையாடும் உங்களுடைய தலையை பல்வேறு விஷயங்கள் அதிகமாக சுற்றும். ராஜஸ்தான் அணிக்காக நீண்ட களமாக விளையாடும் எனக்கு நிறைய ஆதரவுகள் இருக்கிறது. அங்கே அனைவரும் நீங்கள் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியில் பங்காற்றி இந்த சீசனை நன்றாக துவங்குவதற்கு வாழ்த்துகின்றனர்” என்று கூறினார்.

Advertisement