லிஸ்ட்ல உம்ரான் மாலிக் இருக்கும் இந்த திட்டம் புதுசா இருக்கே.. பிசிசிஐ’யை பாராட்டிய இயன் பிஷப்

Ian Bishop
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக 2023 – 24 காலண்டர் வருடத்தில் விளையாட உள்ள வீரர்களுக்கான மத்திய சம்பள ஒப்பந்தல் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிசான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் ராகுல் டிராவிட் மற்றும் ஜெய் ஷா அறிவுறுத்தியும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் அவர்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

மற்றபடி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் 4 நட்சத்திர வீரர்கள் 7 கோடிகளை சம்பளமாக பெறும் ஏ ப்ளஸ் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, கில், முகமது சிராஜ் போன்ற வீரர்கள் 5 கோடிகளை சம்பளமாக பெறும் ஏ பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

பிஷப் பாராட்டு:
மேலும் புதிய நம்பிக்கையை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஜெய்ஸ்வால் 3 கோடிகளை சம்பளமாக பெறும் பி பிரிவிலும் ரிங்கு சிங், திலக் வர்மா போன்ற இளம் வீரர்கள் முதல் முறையாக 1 கோடியை சம்பளமாக பெறும் சி பிரிவிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அது போக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு என்று தனியாக புதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தரத்தை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் முதல் முறையாக பிசிசிஐ இந்த ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஆகாஷ் தீப், 150 கி.மீ வேகத்தில் பந்து வீசும் திறமையை கொண்ட ஜம்மு காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் ஆகியோரை ஒப்பந்தம் செய்ய தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

- Advertisement -

அத்துடன் விஜயகுமார் விய்ஷக், யாஷ் தயாள், வித்வாத் கவேரப்பா ஆகிய உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் அந்தப் பட்டியலில் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிசிசிஐயின் இந்த ஒப்பந்தம் புதிதாக இருப்பதாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிஷப் வரவேற்றுள்ளார்.

இதையும் படிங்க: 19 வயசுலயே ரோஹித் சர்மா பேசியது குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்த – சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட்

இது பற்றி ட்விட்டரில் அவர் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “வேகப்பந்து வீச்சுக்கு ஒப்பந்தங்களை வழங்க இந்தியா புதுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக அந்த பட்டியலில் உம்ரான் மாலிக் பெயர் இருப்பதற்கு நான் பெரிய ரசிகன். உலக அளவில் போட்டித் தன்மையுடன் இருக்க விரும்பும் எந்த அணியும் தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க வேண்டும்” என்று பாராட்டியுள்ளார்.

Advertisement