19 வயசுலயே ரோஹித் சர்மா பேசியது குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்த – சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட்

Rohit-Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த 2007-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாக இதுவரை 262 ஒருநாள் போட்டிகள், 58 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 151 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வினாடி வரும் அவர் 243 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

தற்போது மூன்று வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மாவே எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான கேப்டனாகவும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதேவேளையில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து விடுவித்து சாதாரண வீரராக விளையாடும்படி கேட்டுக் கொண்டது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் முன்னரே 19 வயதில் ரோகித் சர்மா கூறிய சில விடயங்கள் குறித்த சுவாரசிய தகவல்களை தற்போது ரோகித் சர்மாவின் சிறு வயது பயிற்சியாளரான தினேஷ் லாட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மாவிற்கு நான் சிறுவயதிலிருந்தே பயிற்சி அளித்துள்ளேன்.

- Advertisement -

அவர் அண்டர் 19 அணிக்காக மும்பை அணியில் இடம் பிடித்திருந்த போது ஒருமுறை நானும் ரோகித்தும் மெர்சிடஸ் கார் ஒன்றை பார்த்தோம். அப்போது அந்த காரை பார்த்த ரோஹித் சர்மா என்னிடம் : “சார் இந்த காரை நான் நிச்சயம் ஒருநாள் வாங்குவேன்” என்று கூறினார். அப்போது நான் அவரிடம் : “உனக்கு என்ன பைத்தியமா? இதெல்லாம் மிகவும் விலை உயர்ந்த கார்” என்றேன்.

இதையும் படிங்க : இன்னும் ஐ.பி.எல் துவங்க சில வாரங்களே உள்ள நிலையில் சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்ட – மிகப்பெரிய பின்னடைவு

ஆனால் அதற்கு பதிலளித்த ரோகித் : “சார் நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள். நான் நிச்சயம் அதனை வாங்குவேன் என்று கூறியிருந்தார். அப்படி 19 வயதிலேயே தான் பெரிய வீரராக உருவெடுப்பேன் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று ரோகித் சர்மா இருக்கும் நிலையை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement