இன்னும் ஐ.பி.எல் துவங்க சில வாரங்களே உள்ள நிலையில் சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்ட – மிகப்பெரிய பின்னடைவு

Conway
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 17-வது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான ஆயத்த பணிகளில் அனைத்து அணிகளையும் சேர்ந்த வீரர்களும் தற்போது முழு முனைப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியும் தங்களது முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அதேபோன்று சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இது கடைசி சீசன் என்பதனால் இந்த தொடரானது சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மத்தியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொடராக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இவ்வேளையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் தற்போது சென்னை அணியில் இடம் பெற்றிருக்கும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது நமது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர துவக்க வீரரான டேவான் கான்வே அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் போது காயமடைந்திருந்த வேளையில் அவரது காயம் தற்போது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

அவருக்கு கட்டை விரலில் ஏற்பட்டுள்ள காயமானது பரிசோதனைகளில் முடிவின் கீழ் பார்க்கையில் அந்த காயம் குணமடைய அவருக்கு சில வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளையும் தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தமிழக வீரராக இங்கிலாந்து அணிக்கெதிரான 5 ஆவது போட்டியில் வரலாறு நிகழ்த்த காத்திருக்கும் – ரவிச்சந்திரன் அஷ்வின்

ஏற்கனவே சிஎஸ்கே அணியில் இடம் பிடித்துள்ள ஷிவம் தூபே, டேரல் மிட்சல், ரச்சின் ரவீந்திரா, முகேஷ் சவுத்ரி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் காயத்தில் சிக்கியுள்ள வேளையில் தற்போது டேவான் கான்வேவும் காயத்தில் சிக்கி இருப்பது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement