தமிழக வீரராக இங்கிலாந்து அணிக்கெதிரான 5 ஆவது போட்டியில் வரலாறு நிகழ்த்த காத்திருக்கும் – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக நடைபெற்ற மூன்று போட்டியிலும் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து இந்து தொடரினை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது வரும் மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நூறாவது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது.

- Advertisement -

இதுவரை இந்திய அணிக்காக 312 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடியுள்ள வேலையில் 13 வீரர்கள் மட்டுமே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார்கள். அதே போன்று ஒட்டுமொத்த அளவில் 76 பேர் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர்.

அந்த வகையில் தற்போது இந்த சாதனை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வினும் இணைய உள்ளார். அது மட்டும் இன்றி தமிழ்நாட்டில் இருந்து ஸ்ரீகாந்த், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் உள்ளிட்ட பிரபல வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருந்தாலும் யாரும் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை.

- Advertisement -

அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் தமிழக வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் தமிழக வீரர் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் 35 முறை 5 விக்கெட், 24 முறை 4 விக்கெட்கள் உட்பட 507 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : எதிர்பார்த்தது போலவே தண்டனையை வழங்கிய பி.சி.சி.ஐ – ஷ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷனுக்கு மறுக்கப்பட்ட சலுகை

அதுமட்டும் இன்றி பேட்டிங்கிலும் 5 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் என 3039 ரன்களை விளாசியுள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் தோனியின் தலைமையின் கீழ் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement