எதிர்பார்த்தது போலவே தண்டனையை வழங்கிய பி.சி.சி.ஐ – ஷ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷனுக்கு மறுக்கப்பட்ட சலுகை

Shreyas-and-Ishan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்து அவர்களுக்கான மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2024-ஆம் ஆண்டிற்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ஏ ப்ளஸ் பிரிவு, ஏ பிரிவு, பி பிரிவு, சி பிரிவு என நான்கு பிரிவுகளின் கீழ் இந்திய வீரர்களுக்கு தனித்தனியே ஆண்டு வருமானத்தை பி.சி.சி.ஐ ஒதுக்கியுள்ளது.

அந்த வகையில் ஏ ப்ளஸ் பிரிவில் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவருக்கும் 7 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அவர்களுக்கு அடுத்து ஏ பிரிவில் 5 கோடி ரூபாய் சம்பளத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல் ராகுல், சுப்மன் கில், ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பி பிரிவில் 3 கோடி ரூபாய் சம்பள அடிப்படையில் நட்சத்திர வீரர்களான சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜெய்ஸ்வால் போன்றவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களை தவிர்த்து சி பிரிவில் திலக் வர்மா ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னாய், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர். முகேஷ் குமார் சஞ்சு சாம்சன். அர்ஸ்தீப், சிங் பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ரஜத் பட்டிதார் ஆகியோருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த பட்டியலில் சமீபத்தில் இந்திய அணியில் இருந்து சில காரணங்களால் விளங்கிய இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர் குழுவிலிருந்து நிபந்தனை விதிக்கப்பட்ட வேளையில் அதனை மதிக்காமல் தனி வேளைகளில் ஈடுபட்ட அவர்கள் இருவரது மத்திய ஊதிய ஒப்பந்தப்பந்தத்தை யும் பிசிசிஐ ரத்து செய்துள்ளது.

இதையும் படிங்க : பி.சி.சி.ஐ-யின் புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோருக்கு இடமில்லை – ஏன் தெரியுமா?

அதன் காரணமாக அவர்கள் இருவருமே இந்த ஆண்டிற்கான சம்பள பட்டியலில் இடம் பெறவில்லை. இதன் மூலம் அவர்களுக்கு பிசிசிஐ இடம் இருந்து கிடைக்கும் சலுகைகள் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement