பி.சி.சி.ஐ-யின் புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோருக்கு இடமில்லை – ஏன் தெரியுமா?

Sarfaraz-and-Jurel
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்த பட்டியலில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அதேபோன்று அண்மையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகிய சில வீரர்களுக்கு ஒப்பந்த பட்டியலில் இடம் கிடைக்காமலும் இருந்து வருகிறது. இது குறித்த விவரங்கள் தான் தற்போது அதிக அளவில் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலில் அண்மையில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய திலக் வர்மா, சிவம் துபே, ரஜத் பட்டிதார், ஜிதேஷ் சர்மா, ரவி பிஷனாய் போன்ற வீரர்களுக்கு பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இடம் கொடுத்துள்ளது.

- Advertisement -

அவர்களை தவிர்த்து இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அறிமுகமான சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோருக்கு இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது.

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியிலிருந்து தற்போது இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் இருவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் இனிவரும் போட்டிகளில் அவர்கள் நிச்சயம் இடம்பெற்று விளையாடுபவர்கள் என்றும் எனவே அவர்களை ஊதிய ஒப்பந்த பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

- Advertisement -

ஆனால் பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் : வருடாந்திர ஊதிய பட்டியலில் இடம்பெற வேண்டும் என்றால் அதற்கு சில நிபந்தனைகள் இருக்கிறது என்றும் அந்த வகையில் வருடாந்திர ஊதிய ஒப்பந்த பட்டியலில் இணைய இருக்கும் வீரர்கள் குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளிலாவது இந்திய அணிக்காக விளையாடி இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : இஷான் போகட்டும்.. பாவம் ஸ்ரேயாஸ் ஐயர்.. எப்போவாச்சும் விளையாடும் அவருக்கு 5 கோடியா? பிசிசிஐ’யை விளாசும் ரசிகர்கள்

அப்படி விளையாடி இருந்தால் மட்டுமே வருடாந்திர ஊதிய ஒப்பந்த பட்டியலில் அவர்களது பெயர் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோரது பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் பி.சி.சி.ஐ தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

Advertisement