இளம் வயசு தாண்டிருச்சு இனிமேல் ஆக்சனை மாற்ற முடியாது – கம்பேக் கொடுக்க அதை செய்ங்க, பும்ராவுக்கு பிஷப் முக்கிய அட்வைஸ்

Ian Bishop
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த 2016இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் உலகின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது வாழ்வில் சந்திக்கும் காயத்தை போலவே கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்த அவர் 2022 ஆசிய கோப்பையில் பங்கேற்காதது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Bumrah

- Advertisement -

அதனால் 2022 டி20 உலக கோப்பையில் எப்படியாவது விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் முழுமையாக அவசரமாக களமிறங்கிய அவர் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடி மீண்டும் காயமடைந்து வெளியேறினார். அது 2022 டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் பும்ரா விளையாடுவார் என்று அறிவித்த பிசிசிஐ தெரிவித்த அவசரமாக களமிறங்கி மீண்டும் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக விலகுவதாக அடுத்த நாளே அறிவித்தது.

பிஷப் ஆலோசனை:
தற்போது முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக கோப்பையில் தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாதாக டெஸ்ட், ஒருநாள், டி20 என சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து ஐபிஎல் தொடரிலும் விளையாடிய அதிகப்படியான பணிச்சுமையே பும்ராவின் காயத்திற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

Akhtar

அதை விட மிகவும் குறுகிய தூரத்திலிருந்து குதிரையை போல் ஓடிவந்து வித்தியாசமாக பந்து வீசும் அவருடைய ஆக்சன் தண்டுவடத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்த பாகிஸ்தானின் சோயப் அக்தர் அதை மாற்றாவிட்டால் நீண்ட காலம் நீடித்து விளையாட முடியாது என்று எச்சரித்திருந்தார். அதே போல் தன்னுடைய ஆக்சனில் எக்ஸ்ட்ரா சில ஓட்டங்களை சேர்ப்பதே இதிலிருந்து பும்ரா மீண்டு வருவதற்கான வழி என்று ஆஸ்திரேலியாவின் பிரட் லீ சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 29 வயதாகும் பும்ரா தன்னுடைய ஆக்சனை மாற்றுவதற்கு 21 வயதாகும் வீரர் அல்ல என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயன் பிஷப் கூறியுள்ளார்.

- Advertisement -

அதாவது காலம் கடந்து விட்டதால் இனிமேல் மாற்ற முடியாத இந்த ஆக்சனை வைத்துக்கொண்டு அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதே தம்முடைய ஆலோசனை என்று தெரிவிக்கும் அவர் தமக்கு தாமே புதிய வழியை கண்டுபிடித்து பும்ரா மீண்டும் விளையாடுவதை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “உலகின் எந்த வேகப்பந்து வீச்சாளரும் தன்னுடைய வேகத்தை கூர்மையாக வைத்துக் கொண்டு அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றே விரும்புவார்கள். அதற்கு அதிகமான மவுசும் உள்ளது”

Bishop

“அதற்காக வேகமாக ஓடுவது, தசைப்பிடிப்பு காயங்கள், உடலின் பணிச்சுமை போன்றவற்றை நீங்கள் நிர்வகிக்க வேண்டும். குறிப்பாக பணிச்சுமை நிர்வாகம் பற்றி நாம் பேச முடியாது. ஏனெனில் அது அந்த குறிப்பிட்ட விளையாட்டு வீரர் எடுக்க வேண்டிய சொந்த முடிவாகும். இருப்பினும் அவரைப் போன்ற வீரர்களை நிர்வகிக்கும் அணி நிர்வாகிகளுக்கு நான் ஒரு ஆலோசனை தெரிவிக்கிறேன். அதாவது பும்ரா போன்ற வீரர்களை நீங்கள் அனைத்து தொடர்களிலும் விளையாட வைக்க முடியாது. எனவே இதிலிருந்து மீள்வதற்கு பும்ரா தன்னுடைய சொந்த வழியை கண்டறிய வேண்டும்”

இதையும் படிங்க:IPL 2023 : ஆஸ்திரேலியர்கள் பார்த்து வளராத ஸ்டைலை எப்டி எல்லா மேட்ச்லயும் ஃபாலோ பண்றிங்க – தோனியை பாராட்டும் வாட்சன்

“அதற்காக நீங்கள் அவருடைய ஆக்சனை மாற்றலாம் என்று நினைக்கக் கூடாது. எனது காலத்தில் நான் அதை செய்ய முயற்சித்த போது இறுதியில் பெரிய சொதப்பலாக முடிந்தது. குறிப்பாக உடம்பின் சில பகுதிகளில் நான் தசைகளை அதிகப்படுத்த முயற்சித்தேன். தற்போது அவர் அதை செய்வதற்கு 21 அல்லது 22 வயதுடையவர் கிடையாது. எனவே தனது கேரியரில் இதுவரை அவர் சிறப்பாக செய்துள்ளதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. நீங்கள் அதை ஏதாவது ஒரு வடிவத்தில் மாற்றியமைக்கலாம். ஆனால் அதை அவரால் தான் செய்ய முடியும். இதிலிருந்து அவர் திரும்பி மீண்டும் பந்து வீசுவதை நான் பார்க்க காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement