IPL 2023 : ஆஸ்திரேலியர்கள் பார்த்து வளராத ஸ்டைலை எப்டி எல்லா மேட்ச்லயும் ஃபாலோ பண்றிங்க – தோனியை பாராட்டும் வாட்சன்

Watson
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 4வது போட்டியில் கடைசி பந்து வரை போராடிய சென்னை வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது. அந்த போட்டியில் 176 ரன்களை துரத்திய சென்னைக்கு ரஹானே 31 ரன்களும் டேவோன் கான்வே 50 ரன்களும் எடுத்ததை தவிர எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

MS Dhoni SIX

- Advertisement -

அதனால் தடுமாறிய சென்னைக்கு கடைசி 5 ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்ட போது தோனியும் ஜடேஜாவும் முடிந்தளவுக்கு போராடியதால் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அதில் முதல் பந்தில் ரன்கள் கொடுக்காத சந்திப் சர்மாவின் அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர்களை பறக்க விட்ட தோனி சென்னையை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். இருப்பினும் கடைசி பந்தில் துல்லியமான யார்கர் வீசிய சென்னையின் வெற்றியை தடுத்து நிறுத்தி ராஜஸ்தானுக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

வாட்சன் வியப்பு:
இருப்பினும் கூட 41 வயதிலும் முழங்கால் வலியுடன் மிகச் சிறப்பாக செயல்பட்ட தோனி வெற்றிக்கு போராடியது ரசிகர்கள் மற்றும் ஏராளமான முன்னாள் வீரர்களை வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் கடந்த பல வருடங்களாக லோயர் மிடில் ஆர்டரில் விளையாடி வரும் தோனி ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் செயல்பட்டு கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்று கைநழுவி சென்ற பல நிறைய மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததுள்ளார்.

MS Dhoni 2011 World Cup SIx

அந்த ஸ்டைலில் ஒரு சில போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும் பெரும்பாலும் வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள காரணத்தாலே அவரை வரலாற்றின் மிகச்சிறந்த ஃபினிஷர் என்றும் போற்றுகின்றார்கள். குறிப்பாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் பெவன் வரலாற்றில் முதல் முறையாக பினிஷிங் செய்வதை அறிமுகப்படுத்தினார் என்றால் அந்த கலையை தோனி அதிகமாக பின்பற்றி பிரபலப்படுத்தியவர் என்றே சொல்லலாம்.

- Advertisement -

மேலும் இந்த வயதிலும் லக்னோவுக்கு எதிரான போட்டியில் கடைசி 2 சிக்ஸர்கள் அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அவர் தம்முடன் பிறந்த ஃபினிஷிங் ஸ்டைல் தம்மை விட்டு எப்போதும் செல்லாது என்பதை நிரூபித்தார். இந்நிலையில் தாம் உட்பட ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனைவருமே முடிந்தளவுக்கு போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச் செல்லாமல் முன்கூட்டியே வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே வளர்ந்ததாக முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

Watson

குறிப்பாக அழுத்தமான கடைசி ஓவரில் வெற்றி என்பது உறுதியாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் அந்த ஸ்டைலை ஆஸ்திரேலியர்கள் பின்பற்றுவதில்லை என்று வாட்சன் கூறியுள்ளார். ஆனால் அவ்வளவு அழுத்தமான ஸ்டைலை தொடர்ந்து பின்பற்றும் எம்எஸ் தோனி தமக்கென்று தனி முத்திரை பதித்துள்ளதாக பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “எவ்விதமான போட்டியையும் முடிந்தளவுக்கு கடைசி ஓவர் வரை எடுத்துச் செல்லாமல் முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்ற அணுகு முறையுடனேயே நான் உட்பட ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள் அனைவரும் வளர்ந்தோம்”

இதையும் படிங்க:IPL 2023 : 17 ஓவரில் பெற வேண்டிய வெற்றியை விட சாதனை முக்கியமா? சுயநலமாக விளையாடிய குஜராத் வீரரை வெளுக்கும் சேவாக்

“ஆனால் இங்கே எம்எஸ் தோனி எப்போதும் அனைத்து போட்டிகளையும் முடிந்த அளவுக்கு நான் கடைசி ஒருவரை எடுத்துச் செல்வேன் என்று விளையாடுகிறார். ஏனெனில் எவ்வளவு ஆழமாக போட்டி செல்கிறதோ அந்தளவுக்கு அழுத்தத்தில் எதிரணி பவுலர்கள் நன்மை விளைவிக்கும் தவறுகளை செய்வார்கள். அதை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்படும் எம்எஸ் தோனி தொடர்ந்து அதை பின்பற்றி வருகிறார். ஆனால் அது ஆஸ்திரேலியர்கள் வளர்ந்த அணுகு முறைக்கு முற்றிலும் மாறுபட்டது” என்று கூறினார்.

Advertisement