2023 உ.கோ அணியில் 4வது இடத்தில் அவர் விளையாட ஆசைப்படுறேன்.. யுவராஜ் சிங் முக்கிய கோரிக்கை.. இந்திய அணி நிர்வாகம் கேட்குமா

Yuvraj Singh 3
- Advertisement -

ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. 1987, 1996, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தி கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது.

முன்னதாக 2019 உலகக் கோப்பையில் ராயுடுவை கழற்றி விட்டு வாய்ப்பளிக்கப்பட்ட விஜய் சங்கர், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் போன்ற நிறைய வீரர்கள் நம்பர் 4வது இடத்தில் காயம் மற்றும் சுமாரான செயல்பாடுகளால் நிலையாக விளையாட முடியாமல் வெளியேறினார்கள். இருப்பினும் கடந்த வருடம் அந்த இடத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையில் 4வது பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு தகுதியானவராக தன்னை அடையாளப்படுத்தினார்.

- Advertisement -

யுவராஜ் கோரிக்கை:
இருப்பினும் அதன் பின் அவர் காயத்தை சந்தித்ததால் 4வது இடத்தில் யாரை விளையாட வைக்கலாம் என்று பெரிய விவாதம் அரங்கேறிய நிலையில் கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து அந்த இடத்தில் சிறப்பாக விளையாடி அசத்தினார். அதே சமயம் ஸ்ரேயாஸ் ஐயரும் குணமடைந்து சமீபத்திய ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் பிரச்சினை முடிந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2011 உலக கோப்பையில் தாம் விளையாடிய 4வது இடத்தில் கே.எல். ராகுல் விளையாட விரும்புவதாக யுவராஜ் சிங் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது கேஎல் ராகுல் 4வது இடத்தில் பேட்டிங் செய்வதை நான் விரும்புகிறேன். இந்திய அணி நிர்வாகமும் அவருக்கு அந்த இடத்தில் 15 – 20 போட்டிகளில் வாய்ப்பு கொடுத்துள்ளது”

- Advertisement -

“மேலும் காயத்திலிருந்து குணமடைந்து ஆசிய கோப்பையில் விளையாடிய அவர் அந்த இடத்தில் 100 ரன்கள் அடித்தார். அதே போல கொழும்புவில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இலங்கைக்கு எதிராக அவர் முக்கியமான 39 ரன்கள் அடித்தார். எனவே தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை தொடர்ந்து 4வது இடத்தில் அணி நிர்வாகம் விளையாட வைக்க வேண்டும்”

இதையும் படிங்க: அன்று இந்தியாவை ஏளனமா பேசுன உங்களுக்கா இப்படி ஒரு நிலைம.. முன்னாள் பாகிஸ்தான் வீரரை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

“ஏனெனில் துவக்க வீரர்கள் எளிதில் அவுட்டாகும் போது 4வது இடத்தில் விளையாடுபவர் முக்கிய வேலை செய்ய வேண்டும். குறிப்பாக பந்தை விடுவதற்கு, ஷார்ட் பிட்ச் பந்தை எதிர்கொள்வதற்கு, பார்ட்னர்ஷிப் அமைப்பதற்கு தேவையான டெக்னிக் அந்த இடத்தில் விளையாடுபவருக்கு தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக துவக்க வீரராக சுமாராக செயல்பட்டதால் ரிஷப் பண்ட்க்கு பதிலாக மிடில் ஆர்டரில் விளையாடி சிறப்பாக செயல்பட்ட ராகுல் தற்போது 5வது இடத்தில் களமிறங்குவதற்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement