தியாகம் பண்ணியும் அந்த விஷயத்துல என்னால் விராட் கோலி ரேஞ்க்கு வர முடியல.. அஸ்வின் ஓப்பன்டாக்

- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் அடித்த அவர் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார்.

அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்த அவர் உலக அளவில் நவீன கிரிக்கெட்டின் நாயகனாக ஜொலித்து வருகிறார். அப்படி ரன்கள், சாதனைகள் செய்வதில் முன்னணியாக செயல்பட்டு வரும் விராட் கோலி ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கும் உலக கிரிக்கெட்டில் மிகச் சிறந்த அடையாளமாக இருந்து வருகிறார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

அஸ்வின் வியப்பு:
இந்நிலையில் சிறந்த ஃபிட்னஸை கடைப்பிடிப்பதற்காக பிடித்த உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றியும் விராட் கோலி அளவுக்கு தம்மால் வர முடியவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அதை என்னுடைய வாழ்வில் நான் செய்த மிகவும் எளிமையான தியாகம் என்று சொல்வேன். நான் என்னுடைய ஃபிட்னஸில் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன்”

“ஆனால் அதை நான் எனக்கு எதிராக கடைபிடித்ததில்லை. இதை கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்ததால் சொல்கிறேன். பொதுவாக நீங்கள் ஒன்றை விரும்பும் போது அதனுடன் சேர்ந்து வருவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் எனக்கு பிடித்த உணவை தியாகம் செய்துள்ளேன். என்னுடைய வாழ்க்கை முறையை தியாகம் செய்துள்ளேன். நான் கடினமாக உடல் பயிற்சிகளை செய்துள்ளேன்”

- Advertisement -

இதையும் படிங்க: அந்த இளம் வீரரை இந்திய அணி சரியா யூஸ் பண்ணல.. வாருங்கால கேப்டனே அவர் தான்.. ராயுடு அதிரடி கருத்து

“இருப்பினும் என்னால் எப்போதுமே விராட் கோலி அளவுக்கு வர முடிந்ததில்லை. அது எனக்கு நானே சமாதானம் செய்து கொண்ட ஒன்று. ஏனென்றால் அது அவருடைய பயணம் இது எனது பயணம். என்னைப் பொறுத்த வரை இயற்கையாகவே தடகளம் இல்லை என்பது என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் ஒரு குறிச்சொல்லாக ஒட்டிக்கொண்டது. என்னைப் பொறுத்த வரை தரையில் நிறுத்தி எனது திறமையை வெளிப்படுத்துவது முன்னணியில் உள்ளது. நான் அதை ஒரு தியாகமாக பார்த்ததில்லை.
மாறாக என்னுடைய பயணத்தின் இன்பம் மற்றும் மகிழ்ச்சியாக பார்க்கிறேன்” என்று கூறினார். அந்த வகையில் ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற சில சீனியர் வீரர்களை விட விராட் கோலி மிகச்சிறந்த ஃபிட்னஸை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement