அந்த இளம் வீரரை இந்திய அணி சரியா யூஸ் பண்ணல.. வாருங்கால கேப்டனே அவர் தான்.. ராயுடு அதிரடி கருத்து

- Advertisement -

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா வென்ற நிலையில் 3வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்று பதிலடி கொடுத்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாண்டியா காயமடைந்ததால் சூரியகுமார் கேப்டனாக அறிவிக்கப்பட்டது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன் அவரை விட உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தை கொண்ட ருதுராஜ் கைக்வாட் இத்தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

- Advertisement -

வருங்கால கேப்டன்:
ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவரது தலைமையில் சிறப்பாக விளையாடிய இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. இந்நிலையில் ருதுராஜ் கேப்டன்ஷிப் திறமைகளை இந்திய அணி நிர்வாகம் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வருங்காலங்களில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் ராயுடு இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை இந்திய கிரிக்கெட்டில் ருதுராஜ் மிகவும் குறைவாக பயன்படுத்தப்படுகிறார் என்று நினைக்கிறேன். மிகச் சிறப்பான திறமையை கொண்டுள்ள அவரை சற்று அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன்”

- Advertisement -

“குறிப்பாக பேட்டிங்கில் பந்தை டைமிங் செய்வது, சிறப்பான ஷாட்டுகளை அடிப்பது ஃபிட்னஸ் மற்றும் பொறுமையை கடைப்பிடிப்பது ஆகியவற்றில் அவர் அசத்துகிறார். எனவே அவர் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட்டராக வருவதற்கான அனைத்தையும் கொண்டுள்ளார். அவர் தனக்குள் அமைதியான ஆக்ரோசத்தை கொண்டுள்ளார். எனவே அவர் வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் சொத்தாக இருக்கலாம்”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு முதல் முறையாக அவங்க ஊரில் அதை காட்டுவோம்.. இங்கிலாந்து வீரர் இப்போதே சவால்

“மேலும் தோனி ஓய்வு பெற்ற பின் அவர் சென்னை அணியை நடத்துவார் என்று நினைக்கிறேன். எனக்கு அது பற்றி உறுதியாக தெரியவில்லை. அதே போல வருங்காலத்தில் இந்திய அணியையும் அவர் கேப்டனாக வழி நடத்தலாம். ஏற்கனவே அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை தலைமை தாங்கியுள்ளார்” என்று கூறினார். அவர் கூறுவது போல 26 வயது மட்டுமே நிரம்பியுள்ள ருதுராஜ் உள்ளூரில் கேப்டன்ஷிப் செய்த அனுபவத்துடன் தோனி தலைமையில் சென்னை அணியில் விளையாடி வருகிறார். எனவே நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் அவரை வருங்காலங்களில் இந்தியாவை வழி நடத்துவதற்காக தேர்வுக்குழு இப்போதே மறைமுகமாக வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement