இந்தியாவுக்கு முதல் முறையாக அவங்க ஊரில் அதை காட்டுவோம்.. இங்கிலாந்து வீரர் இப்போதே சவால்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது விளையாடி வரும் இந்தியா ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் வழக்கம் போல இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 11 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் கூட சொந்த மண்ணில் இந்தியா தோல்வியை சந்தித்ததே கிடையாது. இருப்பினும் கடைசியாக கடந்த 2012இல் இங்கிலாந்து தான் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்திருந்தது.

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக:
எனவே அந்த உத்வேகத்துடன் இத்தொடரில் களமிறங்க உள்ள இங்கிலாந்து எக்ஸ்ட்ராவாக “பஸ்பால்” அணுகுமுறையை கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஜோ ரூட் விலகிய பின் கேப்டனாக பொறுப்பேற்ற பெண் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான அணுகுமுறையை பின்பற்றி கடந்த 2 வருடங்களில் இந்தியாவுக்கு எதிரான ரத்து செய்யப்பட்ட 5வது போட்டி, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற வைத்தார்.

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2 – 0 என்ற கணக்கில் பின்தங்கிய இங்கிலாந்து அதன் பின் அதிரடியாக விளையாடி 2023 ஆஷஸ் தொடரை சமன் செய்தது. இந்நிலையில் 2024 பிப்ரவரியில் நடைபெறவுள்ள அத்தொடரில் இந்தியாவுக்கு அவர்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக தங்களுடைய அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை காட்டுவோம் என்று இங்கிலாந்து வீரர் ஓலி போப் தெரிவித்துள்ளார். இது பற்றி டெலிகிராப் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அத்தொடரில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவதை நாங்கள் பார்க்கிறோம். அது உங்களுடைய எதிர்பார்ப்பை எப்படி நீங்கள் கையாள்கிறீர்கள் என்பதில் உள்ளது. நீங்கள் அனைத்து போட்டிகளிலும் சதமடிக்க விரும்பினாலும் தடுமாறினால் அதை செய்ய முடியாது. ஆனால் இந்தியாவில் 60 பந்துகளில் 60 ரன்கள் எடுப்பது கூட வெற்றியை பெற்றுக் கொடுக்கும். குறிப்பாக அங்குள்ள பிட்ச்களில் 200 ரன்கள் எடுப்பது நல்ல ஸ்கோராக இருக்கலாம்”

இதையும் படிங்க: 16 வருஷம் ஆச்சு.. உண்மையாவே தப்ப உணர்ந்தா சீக்கிரம் ஏதாச்சும் பண்ணுங்க.. கவாஸ்கர் அதிரடி கோரிக்கை

“அஸ்வின் அவர்களுடைய அணியில் உலகின் சிறந்த ஸ்பின்னராக இருக்கிறார். ஆனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் பந்தை மிகவும் கூர்மையாக நகர்த்தும் திறமை கொண்டவர்கள். இருப்பினும் அதை அதிரடியாக எதிர்கொண்டு பதிலுக்கு அழுத்தத்தை போடுவதே அவர்களுக்கு எதிராக நீங்கள் ரன்கள் அடிப்பதற்கான வழியாகும். ஆனால் நாங்கள் எங்களுடைய வழியில் விளையாடி வெற்றி பெறுவதற்கான வழியை உடைப்போம்” என்று கூறினார்.

Advertisement