16 வருஷம் ஆச்சு.. உண்மையாவே தப்ப உணர்ந்தா சீக்கிரம் ஏதாச்சும் பண்ணுங்க.. கவாஸ்கர் அதிரடி கோரிக்கை

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்றது. மறுபுறம் ரோகித் சர்மா தலைமையில் சொந்த மண்ணில் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து உச்சகட்ட ஃபார்மில் எதிரணிகளை தெறிக்க விட்டு இந்தியா மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அந்த வகையில் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்த நிலைமையில் அடுத்ததாக நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக மீண்டும் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

கவாஸ்கர் கோரிக்கை:
அதில் ஓய்வெடுக்கும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதால் அவர்கள் நிச்சயம் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் 2007க்குப்பின் 16 வருடங்களாக இந்திய அணியால் டி20 உலக கோப்பையை வெல்ல முடியவில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே தவறுகளை ஒப்புக்கொண்டு அடுத்து வரும் வாரங்களில் சில சீனியர் வீரர்கள் மற்றும் தேர்வுக் குழுவினர் மீது எடுக்க வேண்டும் என்று மறைமுகமாக கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி மிட் டே பத்திரிகையில் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“மேற்கொண்டு உலகக் கோப்பை வெல்வதற்கு ஃபைனலில் செய்த சில தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் செயல்பாடுகள் மெதுவாகி விடும். எனவே அடுத்த சில வாரங்களில் சில தனி நபர்கள் மற்றும் தேர்வு குழுவினர் மீது பெரிய முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனெனில் 2007 டி20 உலகக் கோப்பைக்கு பின் ஐபிஎல் தொடரில் நிறைய இளம் வீரர்கள் கிடைத்தும் இந்தியா மேற்கொண்டு வெல்லவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றமாகும்”

இதையும் படிங்க: சந்தேகமே வேண்டாம்.. அவர் தான் இந்திய அணியின் வருங்கால 3 ஃபார்மட் பிளேயர்.. ஆஷிஸ் நெஹ்ரா பாராட்டு

“இந்தியா 2023 உலகக் கோப்பையை வெல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது முடிந்து போனது. அதிலிருந்து நாம் நகர வேண்டும். கடந்த 4 உலகக் கோப்பைகளில் இந்திய அணி 2 முறை ஃபைனலுக்கும் 2 முறை செமி ஃபைனலுக்கும் சென்று 1 வெற்றியை பெற்றுள்ளது. மற்ற அணிகளுடன் இதை நீங்கள் ஒப்பிடும் போது அபாரமான செயல்பாடாகும். ஆஸ்திரேலியா மட்டுமேஅந்த காலகட்டங்களில் 2 கோப்பைகளை வென்றுள்ளது” என்று கூறினார்.

Advertisement