விராட் கோலிக்கு மரியாதை கொடுங்க, நிச்சயம் 110 சதங்கள் அடிப்பாரு – முன்னாள் பாக் வீரரின் ஆதரவு

Kohli
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மீண்டும் சுமாராக செயல்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வரலாற்றில் 15-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இந்த வருடம் புதிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தலைமையில் களமிறங்கிய போதிலும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அந்த அணியின் இந்த தோல்விக்கு அதன் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சுமாரான பேட்டிங் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. கடந்த 2008 முதல் ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரராக சாதனை படைத்துள்ள அவர் தனது அபார பேட்டிங்கால் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

VIrat Kohli Knock Out

- Advertisement -

மேலும் 2013 – 2021 வரை கேப்டனாக அந்த அணியை வழிநடத்தியும் கோப்பையை வெல்ல முடியாத அவர் அதற்காக கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதால் கடந்த வருடம் அந்தப் பதவியிலிருந்து விலகினார். அத்துடன் இந்திய கேப்டன் பதவியிலிருந்தும் விலகிய அவர் 2019க்கு பின் சதமடிக்க முடியாமல் திணறி வரும் கதைக்கு சுதந்திர பறவையாக விளையாடி முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

விமர்சனத்தில் விராட்:
ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஐபிஎல் சீசனில் 3 முறை கோல்டன் டக் அவுட்டான அவர் 2019க்கு பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என 100 போட்டிகளுக்கும் மேலாக கடந்த 3 வருடங்களாக சதத்தை தொட முடியாமல் படுமோசமான பார்மில் தவிக்கிறார். இந்த வருடம் பங்கேற்ற 16 போட்டிகளில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்த அவர் 341 ரன்களை 22.73 என்றும் மோசமான சராசரியில் 115.99 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்ததே அதற்குச் சான்றாகும். கடந்த பல வருடங்களாக இந்தியாவிற்காகவும் ஐபிஎல் தொடரிலும் ஓடிஓடி மழை பொழிந்த அவரின் உடலிலும் ஆட்டத்திலும் அந்தப் பழைய பவர் இல்லாமல் களைப்பு தெரிந்தது.

Virat Kohli Bowled

அதன் காரணமாக உடனடியாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி 2 – 3 மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் ஃபார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் அவரை அறிவுறுத்தினார்கள். ஆனால் தொடர்ந்து விளையாடினால் தான் பார்முக்கு திரும்ப முடியும் என்ற கூறிய விராட் கோலி விமர்சனத்திற்கு பின்வாங்காமல் இறுதிவரை விளையாடிய போதிலும் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அதனால் “விராட் கோலி முடிந்துபோனவர்” என்பது போல் நிறைய விமர்சனங்களுக்கும் கிண்டல்களுக்கும் சமூக வலைதளங்களில் அவர் உள்ளாகியுள்ளார்.

- Advertisement -

மரியாதை கொடுங்க:
இந்நிலையில் பார்ம் என்பது தற்காலிகமானது என்று தெரிவித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கடந்த 3 வருடங்களாக விராட் கோலி சுமாராக செயல்பட்டாலும் தம்மை பொருத்தவரை அவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்த கடினமான தருணத்தில் ஆதரவு தெரிவித்து பாராட்டியுள்ளார். அதனால் அவரின் மனைவி அனுஷ்கா சர்மாவை இழுத்துப் பேசுவது போன்ற விமர்சங்களை செய்யாமல் முடிந்த அளவுக்கு மரியாதை கொடுங்கள் அதுவே அவருக்கு தன்னம்பிக்கை கொடுத்து பார்முக்கு திரும்ப வருவதற்கு உதவும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சச்சின் ஒரு மிகச்சிறந்த தன்னடக்கம் மிகுந்தவர். அவரை எப்போதுமே ரசிப்பேன். அவர் எப்போதும் அனைவரிடமும் மரியாதையாக பேசுவார். அவரிடமிருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போதும் கூட அவர் யார் மனதும் புண்படாத வகையிலேயே அவர் ட்வீட் போடுகிறார். நாங்கள் தற்போது வயதாகி விட்டோம். சோயப் அக்தர் என்பவர் இப்போதும் 25 வயதுடையவர் கிடையாது. அதனால் ஊடகங்களுக்கு முன்பாக அது போன்ற விமர்சனங்களை வைத்து உங்களை ஏன் நீங்களே அவமானப்படுத்தி கொள்கிறீர்கள். உங்களது கருத்துக்களை குழந்தைகளும் பார்ப்பார்கள் என்பதால் விராட் கோலிக்கு மரியாதை கொடுங்கள்” என்று கூறினார்.

- Advertisement -

110 சதங்கள்:
மேலும் ஏற்கனவே 70 சதங்களை அடித்து தன்னை ஒரு ஜாம்பவான் என்று நிரூபித்துள்ள விராட் கோலி நிச்சயம் வரும் காலங்களில் சச்சினின் சாதனையை உடைத்து 110 சதங்கள் அடிப்பார் என்றும் மிகப்பெரிய எனர்ஜியை சோயப் அக்தர் கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அவருக்கு ஏன் மரியாதை கொடுக்கக் கூடாது? ஒரு பாகிஸ்தானியராக நான் சொல்கிறேன் அவர் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர். அவர் 110 சதங்கள் அடிப்பார் என்று தைரியமாக நான் பந்தயம் கட்டுவேன். நீங்கள் 45 வயது வரை விளையாட முடியாது என்பதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். தற்போதைய இந்த கடினமான தருணங்கள் உங்களை 110 சதங்கள் அடிப்பதற்கு தயார்படுத்தி வருகிறது”

இதையும் படிங்க : தோனி மீது FIR பதிந்த பீஹார் போலீஸ். மோசடியில் சிக்கிய நிறுவனம் – என்ன நடந்தது? (விவரம் இதோ)

“நிறைய பேர் உங்களுக்கு எதிராக எழுதுகிறார்கள், ட்வீட் போடுகிறார்கள். தீபாவளியன்று நீங்கள் போட்ட பதிவிற்கு விமர்சிக்கப்படுகிறீர்கள். நிறைய பேர் உங்களது மனைவி மற்றும் குழந்தைகளை பற்றி ட்வீட் செய்கிறார்கள். இந்த மோசமான தருணங்களுக்கு மத்தியில் இயற்கை உங்களை 110 சதங்களை அடிக்க தயார்படுத்தி வருகிறது. எனவே எனது வார்த்தைகளை மனதில் வைத்துக்கொண்டு இன்றிலிருந்து அதை தொடுவதற்கான வேலையை தொடங்குங்கள்” என்று கூறினார்.

Advertisement