தோனி மீது FIR பதிந்த பீஹார் போலீஸ். மோசடியில் சிக்கிய நிறுவனம் – என்ன நடந்தது? (விவரம் இதோ)

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் அவரின் மீது உள்ள எதிர்பார்ப்பு மற்றும் கவனம் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் அவர் இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பெரிய வீரராக கொண்டாடப்பட்டு வருகிறார்.

MS Dhoni vs MI

- Advertisement -

அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக தான் விளையாட இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் ஜடேஜாவின் தலைமையில் சென்னை அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்கவே மீண்டும் பாதியில் தோனி சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

இருப்பினும் இத்தொடரில் 9-வது இடம் பிடித்து சென்னை அணி வெளியேறியது. ஆனால் மீண்டும் அடுத்த ஆண்டு நிச்சயம் சிஎஸ்கே அணி வலுவான கம்பேக் கொடுக்கும் என்று தோனி உறுதியளித்து இந்த தொடரில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து ராஞ்சிக்கு சென்ற தோனி தற்போது சொந்த வேலை காரணமாக சென்னை வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தோனி ராஞ்சிக்கு சென்றபோது அவர் மீது பீகார் காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Dhoni

அதன்படி கிரிக்கெட்டை தவிர்த்து அதிக அளவில் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நியூ கிளோபல் ப்ரொடியூஸ் என்கிற நிறுவனத்திற்காகவும் அவர் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அந்த நிறுவனமானது (நியூ கிளோபல் ப்ரொடியூஸ்) பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அதன் காரணமாக அந்த நிறுவனத்தின் இடமிருந்து காசோலைகளை பெற்ற பல நிறுவனங்கள் ஏமாந்து போயுள்ளன.

- Advertisement -

இப்படி நியூ கிளோபல் ப்ரொடியூஸ் நிறுவனத்திடமிருந்து எஸ் கே எனும் உரம் தயாரிக்கும் நிறுவனமானது 30 லட்ச ரூபாய்க்கு காசோலை பெற்ற நிலையில் அந்த காசோலை பவுன்ஸ் ஆகி அந்த குறிப்பிட்ட அக்கவுண்டில் பணம் இல்லை என வங்கி தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக அந்த நியூ கிளோபல் ப்ரொடியூஸ் நிறுவனத்தின் மீதும் அந்த நிறுவனத்தை பிரபலப்படுத்தியதற்காக தூதுவர் என்கிற முறையில் தோனி மீதும் பிஹார் போலீசார் மூலமாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நான் பந்துவீச கஷ்டப்படும் ஒரே இளம் இந்திய பேட்ஸ்மேன் இவர்தான் – ரஷீத் கான் வெளிப்படை

அதோடு இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அந்த நிறுவனம் மற்றும் தோனி ஆகியோருடன் சேர்த்து 8 பேரின் மீது மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement