நான் தான் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன், விராட் கோலி எனக்கு அப்றம் தான் – யாரென தெரியாத பாக் வீரர் பகிரங்க பேட்டி

Virat Kohli Khurram Manzoor
Advertisement

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008ஆம் ஆண்டு ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் நாட்கள் செல்ல செல்ல நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி அசத்தினார். குறிப்பாக 2013இல் சச்சின் ஓய்வு பெற்ற பின் அவரைப்போலவே உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு தரமான பந்து வீச்சாளர்களை மிகச் சிறப்பாக எதிர்கொள்ளும் அவர் ரன் மெஷினாக செயல்பட்டு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் 74 சதங்கள், 24000+ ரன்களை அடித்துள்ள அவர் 33 வயதிலேயே தன்னை ஜாம்பவானாக நிரூபித்து நவீன கிரிக்கெட்டில் உலகின் மகத்தான வீரராக போற்றப்படுகிறார்.

அப்படி நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்படும் அவருடன் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தங்களை தாங்களே அவரை விட உயர்ந்தவர் என்று ஒப்பிட்டுக் கொள்வது வழக்கமாகும். குறிப்பாக 2019க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் பாபர் அசாம் விராட் கோலியை விட சிறந்தவர் என அந்நாட்டவர்கள் பேசுவது சகஜமாகும். இருப்பினும் சமீப காலங்களில் அவரது தலைமையில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்து வருவதே அவருக்கும் விராட் கோலிக்கும் ஏணி வச்சாலும் எட்டாது என்பதற்கு சான்றாகி வருகிறது.

- Advertisement -

நான் தான் நம்பர் ஒன்:
அதனால் பாபர் அசாம் வேண்டுமானால் அவராக இருக்கலாம் ஆனால் எப்போதும் விராட் கோலியை நெருங்க முடியாது என்று இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் உலகில் நான் தான் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்று தெரிவிக்கும் பாகிஸ்தான் வீரர் குராம் மன்சூர் விராட் கோலி தமக்கு அடுத்து தான் என்று தவறான புள்ளி விவரங்களுடன் பேசி ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னை நானே விராட் கோலியுடன் நான் ஒப்பிடவில்லை. ஆனால் உண்மை என்னவெனில் 50 ஓவர் கிரிக்கெட்டில் டாப் 10இல் யார் இருந்தாலும் நான் தான் நம்பர் ஒன் ஆவேன். எனக்கு பின்பு தான் விராட் கோலி இருப்பார்”

“ஏனெனில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் என்னுடைய கன்வர்சன் ரேட் அவரை விட அதிகமாகும். குறிப்பாக அவர் ஒவ்வொரு 6 இன்னிங்சுக்கு ஒரு முறை சதமடித்து வருகிறார். ஆனால் நான் ஒவ்வொரு 5.68 இன்னிங்சுக்கு ஒருமுறை சதமடித்து வருகிறேன். மேலும் கடந்த 10 வருடங்களில் 53 என்ற அளவில் இருக்கும் என்னுடைய பேட்டிங் சராசரி உலக அளவிலான லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 5வது இடத்தில் உள்ளது. மேலும் கடந்த 48 இன்னிங்ஸில் நான் 24 சதங்கள் அடித்துள்ளேன்”

- Advertisement -

“அத்துடன் 2015 முதல் இப்போது வரை பாகிஸ்தானுக்காக தொடக்க வீரராக களமமிறங்கியவர்களில் நான் இன்னும் அதிக ரன்களை அடித்தவர்களில் ஒருவராக இருக்கிறேன். மேலும் உள்ளூர் நேஷனல் டி20 கோப்பையில் நான் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்தவராக இருக்கிறேன். இருப்பினும் பாகிஸ்தான் அணியில் எனக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதற்கான காரணத்தையும் யாரும் இதுவரை தெரிவிக்கவில்லை” என்று கூறினார். இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் “முதலில் நீங்கள் யார் உங்களை நாங்கள் அதிகம் பார்த்ததில்லை” என்றே ரியாக்சன் கொடுக்கிறார்கள்.

ஏனெனில் 2008இல் அறிமுகமாகி பாகிஸ்தானுக்காக 16 டெஸ்ட், 7 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் எப்போதுமே நிலையாக விளையாடும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதில்லை என்பதால் வெளிநாட்டு ரசிகர்களிடம் பிரபலமாகவில்லை. அத்துடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 166 போட்டிகளில் 27 சதங்களுடன் 7992 ரன்களை அடித்துள்ள அவர் 6.11 இன்னிங்ஸ்களுக்கு ஒருமுறை தான் சதமடித்து வருகிறார். மேலும் 53.42 என்ற அவருடைய சராசரி உலக அளவில் 6வது இடத்தில் உள்ளது. ஆனால் விராட் கோலி 294 லிஸ்ட் ஏ போட்டிகளில் 50 சதங்கள் உட்பட 14215 ரன்களை அடித்துள்ளார்.

இதையும் படிங்க: IND vs NZ : பேட்டிங் மற்றும் பவுலிங் என அசத்திய ஆட்டநாயகன் ஷர்துல் தாகூர் – போட்டிக்கு பிறகு பேசியது என்ன?

குறிப்பாக நான் தான் நம்பர் ஒன் என்று சொல்லும் அவரை விட 5.88 இன்னிங்ஸ்களுக்கு ஒருமுறை சதமடித்து வருகிறார். அதில் 12000+ ரன்களும் 46 சதங்களும் சர்வதேச அளவில் அடிக்கப்பட்டதாகும். அப்படிப்பட்ட நிலையில் எங்களுக்கு யார் என்றே தெரியாத நீங்கள் எப்படி விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க முடியும் என்று இந்திய ரசிகர்கள் அவரது இந்த ஒப்பீட்டை கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement