டெய்லி இந்தியாவில் அதை சாப்பிடுறோம்.. அதான் எங்க ஃபீல்டிங் ஸ்லோவாகிடுச்சு.. சடாப், பாபர் பேட்டி

- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வெல்வதற்காக உலகின் அனைத்து டாப் 10 கிரிக்கெட் அணிகளும் வருகை தந்துள்ளன. அதில் அண்டை நாடான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் கடைசியாக கடந்த 2016 டி20 உலகக் கோப்பைக்கு பின் சரியாக 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். சொல்லப்போனால் எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக தற்போதைய அணியில் இருக்கும் பாபர் அசாம், முகமது ரஸ்மான் உள்ளிட்ட அனைத்து வீரர்களுமே தங்களுடைய வாழ்வில் முதல் முறையாக இப்போது தான் இந்தியாவுக்கு வந்துள்ளார்கள் என்றே சொல்லலாம். அந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் நினைத்ததை விட விருந்தோம்பலுக்கு பெயர் போன இந்தியர்கள் பாபர் அசாம் தலைமையிலான அணியினருக்கு ஹைதராபாத் நகரில் ஆரவாரமான வரவேற்பு கொடுத்தனர்.

- Advertisement -

இந்தியாவின் சுவை:
குறிப்பாக இந்திய வீரர்களுக்கு நிகராக சாலையின் இரு புறங்களிலும் பயிற்சி போட்டிகள் நடைபெற்ற மைதானங்களிலும் தங்களுக்கு இந்திய ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்ததாக பாபர் அசாம், முகமது ரஹ்மான் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்தனர். அந்த சூழ்நிலையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுக்கு எதிரான பாகிஸ்தானின் பயிற்சி போட்டிகள் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.

அதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக ஹைதராபாத் நகரில் இருக்கும் பாகிஸ்தான் அணியினர் அங்குள்ள ஹோட்டலில் மிகவும் உயரிய பிரியாணியை சுவைத்து வருகின்றனர். பொதுவாகவே இந்தியாவில் ஹைதராபாத் பிரியாணி மிகவும் புகழ்வாய்ந்ததாகவும் சுவை மிகுந்ததாகவும் கருதப்படுகிறது. அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணியினர் 14 வித்தியாசத்தில் தோல்வியை சந்திப்பதற்கு சுமாரான ஃபீல்டிங் முக்கிய காரணமாக இருந்தது.

- Advertisement -

குறிப்பாக ஷிகர் தவான் புயல் அடிக்கும் அளவுக்கு கைக்கு வந்த பந்தை 2 வீரர்கள் பிடிக்காமல் விட்டது சமூக வலைதளங்களில் வைரலானது. அது பற்றி போட்டியின் முடிவில் கேட்ட போது “தினந்தோறும் நாங்கள் பிரியாணி சாப்பிட்டோம். அதனால் தான் களத்தில் நாங்கள் சற்று மெதுவாக செயல்பட்டிருக்கலாம்” தற்காலிக கேப்டனாக செயல்பட்ட சடாப் கான் செய்தியாளர்களிடம் கலகலப்பாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: தயவுசெய்து எங்களை தொந்தரவு செய்யாமல் இருங்க. வேண்டுகோள் வைத்த – விராட் கோலி

அத்துடன் பாகிஸ்தான் நிர்வாகம் வெளியிட்ட ட்விட்டர் வீடியோவில்
கராச்சியை விட ஹைதராபாத் நகரில் பிரியாணி சிறப்பாக இருப்பதாக ஆல் ரவுண்டர் ஹசன் அலியும் ஹைதராபாத் பிரியாணிக்கு 10க்கு 8 பெண்கள் கொடுப்பேன் என்று பாபர் அசாம் தெரிவித்தார். அவர்களை மிஞ்சிய இமாம்-உல்-ஹக் 10க்கு 11 மதிப்பெண்களும் ஹரிஷ் ரவூப் 10க்கு 20 பெண்களும் கொடுப்போம் என்று தெரிவித்தனர். அதைப் பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் ஹைதராபாத் பிரியாணி சுவையில் மயங்கி உலக கோப்பையில் தோற்று விடாதீர்கள் என்று கவலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement