
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது 42 வயதாகும் தோனிக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுவதால் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் முதல் மூன்று அணிகளாக தகுதி பெற்றுவிட்டன.
அதற்கு அடுத்து எஞ்சியுள்ள ஒரு இடத்திற்கு சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்?
என்பது குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹஸி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தோனிக்கு 42 வயதான போதிலும் இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரால் போட்டிகளின் போது சமாளிக்க முடிகிறது.
என்னுடைய தனிப்பட்ட பார்வையில் தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என்று நம்புகிறேன். எனினும் ஓய்வு பெறும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். தற்போதைக்கு தோனி ஓய்வு அறிவிக்க மாட்டார் என்றே எனக்கு தோன்றுகிறது.
ஏனெனில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பதவியில் முழு தகுதி பெறும் வரை தோனி அணியில் இருக்க விரும்புகிறார். மேலும் கேப்டன்சி காரணமாக பேட்டிங்கில் சறுக்காமல் சிறப்பாக விளையாடுகிறார். தோனி முன்கூட்டியே பேட்டிங் களமிறங்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
இதையும் படிங்க : எந்த அணிக்கும் லாஸ் தான்.. ஹர்டிக் பாண்டியா இல்லாததால் குஜராத் மண்ணை கவ்வியதா? கேப்டன் கில் பதில்
ஆனால் முழங்காலில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாகவே அவர் பின் வரிசையில் விளையாடிகிறார். இருப்பினும் களத்திற்கு வந்த முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடும் திறனையும் தோனி வைத்துள்ளார் என மைக்கல் ஹஸி கூறியது குறிப்பிடத்தக்கது.