இப்போவாச்சும் என்னையும் என் திறமையும் புரிஞ்சுக்கோங்க – விமர்சனங்களுக்கு கேஎல் ராகுல் நெகிழ்ச்சியான பதில்

Rahul
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. உலக கோப்பைக்கு முன்பாக சமீபத்திய ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெற்றி பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ள இந்தியா இந்த வெற்றியால் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து வரலாற்றை மாற்றியுள்ளது. அதனால் புத்துணர்ச்சியடைந்துள்ள இந்தியா கடைசி போட்டியிலும் வென்று ஒயிட் வாஷ் வெற்றியுடன் ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு தயாராக உள்ளது.

KL-RAHUL

- Advertisement -

முன்னதாக டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாகவும் தொடக்க வீரராகவும் களமிறங்கும் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சமீப காலங்களில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார் என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடருக்கு பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து வந்த அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிராகவும் ஆசிய கோப்பையில் ஹாங்காங்க்கு எதிராகவும் சொதப்பியது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதைவிட வெறும் 107 ரன்களை துரத்திய திருவனந்தபுரம் டி20 போட்டியில் 56 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மெதுவாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற மோசமான உலக சாதனை படைத்தது அனைவரையும் அதிருப்தியடைய வைத்தது.

இப்போவாவது புரிஞ்சுக்கோஙக:
அந்த நிலையில் கௌகாத்தியில் நடைபெற்ற 2வது போட்டியில் 200க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் 57 (28) ரன்களை குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செயல்பட்டார். மேலும் ஏற்கனவே க்ளாஸ் நிறைந்த பேட்ஸ்மேனாக நல்ல பார்மில் இருந்த அவர் காயத்திலிருந்து திரும்பி தடுமாறும் இந்த சூழ்நிலையில் சிறப்பாக விளையாடிய காரணத்தாலேயே அவருடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில் சதமடித்த மில்லருக்கும் அல்லாமல் சூரியகுமாருக்கும் அல்லாமல் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

KL Rahul

இந்நிலையில் எப்போதுமே ஸ்ட்ரைக் ரேட் பற்றி கவலைப்படாமல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுயநலமின்றி விளையாடுவதாக தெரிவிக்கும் கேஎல் ராகுல் கௌகாத்தி போட்டியில் அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலை இருந்ததால் அதிரடியாக விளையாடியதாக விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த போட்டியில் (கௌகாத்தி) அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலை தேவைப்பட்டதால் நான் அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினேன். எப்போதுமே முதலில் பேட்டிங் செய்யும் போது ஒரு சில ஓவர்களில் பிட்ச் மற்றும் காலசூழ்நிலையை புரிந்து கொண்டு அதன்பின் நீங்கள் அதிரடியாக விளையாட வேண்டியது அவசியமாகும்”

- Advertisement -

“மேலும் உங்களுடைய பார்ட்னருடன் எந்த மாதிரியான ஷாட் அடிக்கலாம் என்பதை கலந்தாலோசித்து உங்களுக்கு நீங்களே சிறிய சிறிய இலக்குகளை நிர்ணயித்து விளையாட வேண்டும். அந்த வகையில் எப்போதுமே சில ரிஸ்க் எடுத்து அதிரடியாக விளையாட நான் முயற்சிக்கிறேன். அது போன்ற ஒரு சூழ்நிலை இப்போட்டியில் தேவைப்பட்ட போது அதற்கேற்றார் போல் நான் சிறப்பாக செயல்பட்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

KL-Rahul

அதாவது 107 என்ற இலக்குக்கு ஏற்ப திருவனந்தபுரத்தில் மெதுவாக விளையாடியதாகவும் கவுகாத்தியில் பெரிய ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்பதால் அதிரடி காட்டியதாகவும் தெரிவிக்கும் ராகுல் தன்னுடைய அணுகுமுறை எப்போதுமே ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி கவலைப்படாமல் அணியின் வெற்றியை மையப்படுத்தியது என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு :

- Advertisement -

“எங்களது நாட்டுக்காக நாங்கள் விளையாடுவதே மிகப் பெரிய பரிசாகும். மேலும் இயற்கையாகவே திறமையை பெற்றுள்ளதாலேயே இந்த இடத்தை நாங்கள் அடைந்துள்ளோம்”. “டி20 கிரிக்கெட்டில் நீங்கள் ஒரு இடத்தில் நின்று சிக்ஸர் அடிக்க முயற்சிப்பீர்கள். அதிலும் 145 கி.மீ வேகத்தில் பந்து வரும்போது அதை நொடிக்குள் எளிதாக சமாளிக்க உங்களிடம் நேரம் இருக்காது. எனவே அதை சமாளிக்க நிறைய வருடங்கள் நாங்கள் பயிற்சிகளை எடுக்கிறோம்.

இதையும் படிங்க : IND vs RSA : இன்றைய கடைசி டி20 போட்டியில் அவங்க 2 பேரும் விளையாட மாட்டாங்க – பி.சி.சி.ஐ அறிவிப்பு

கடந்த உலகக் கோப்பைக்கு பின்பாக கடந்த 10 – 12 மாதங்களில் தோல்வியிலிருந்து முன்னேற நிறைய உழைத்துள்ளோம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தோல்வி பாடங்களில் கற்றுக் கொண்டவற்றை திருத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்” என்று கூறினார்.

Advertisement