இம்முறையும் பவுண்டரி கவுண்ட் தானா? ஒருவேளை ஃபைனல் டை’யில் முடிந்தால் கோப்பை யாருக்கு? ஐசிசி ரூல்ஸ் இதோ

IND vs AUS Tie.jpeg
- Advertisement -

இந்தியாவின் அகமதாபாத் நகரில் நவம்பர் 19ஆம் தேதி ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் செமி ஃபைனல் சுற்றில் வென்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. அதில் வென்று உலகின் புதிய சாம்பியன் என்ற பட்டத்துடன் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

குறிப்பாக கடந்த 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் இந்தியா இம்முறை அதை உடைத்து சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. மறுபுறம் 2003 உலகக்கோப்பை ஃபைனல் மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்தது போல இம்முறையும் வென்று 6வது கோப்பை வெல்வோமா என்ற எதிர்பார்ப்பு ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

சமனில் முடிந்தால்:
இருப்பினும் சொந்த மண்ணில் தொடர்ந்து 10 போட்டிகளில் வென்றுள்ள இந்தியா அட்டகாசமான ஃபார்மில் இருப்பதால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என்பதே இந்திய ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இப்போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஷமி, வார்னர், மிட்சேல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் என முழுக்க முழுக்க தரமான வீரர்கள் தங்களுடைய நாட்டுக்கு வெற்றியை கொடுக்க போராட உள்ளனர்.

அதனால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி கடைசி ஓவர் வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது. அது போன்ற சூழ்நிலையில் ஒருவேளை இரு அணிகளும் சமமான ஸ்கோர் அடித்து போட்டி டையில் முடிந்தால் கோப்பை யாருக்கு கொடுக்கப்படும் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கலாம். ஏனெனில் 2019 உலகக்கோப்பையில் லண்டனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

- Advertisement -

அதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து எடுத்த அதே 241 ரன்களை 2வதாக சேசிங் செய்த இங்கிலாந்தும் எடுத்தது. அதனால் போட்டி டையில் முடிந்த போது நியூசிலாந்தை (17) விட அதிக பவுண்டரிகளை (26) அடித்த அணி என்ற முட்டாள்தனமான விதிமுறையை பின்பற்றி கோப்பையை இங்கிலாந்துக்கு ஐசிசி தாரை வார்த்தது உலக அளவில் மிகப்பெரிய விமர்சனங்களை எழுப்பியது.

இதையும் படிங்க: சொந்த ஊரில் நடக்கும் ஃபைனலை தவற விட்ட பாண்டியா.. இந்திய அணிக்கு உருக்கமான கோரிக்கை

அதனால் பாடத்தை கற்ற ஐசிசி தற்போது விதிமுறையை மாற்றியுள்ளது. அதாவது இம்முறை ஃபைனல் சமனில் முடியும் பட்சத்தில் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்படும். ஒருவேளை அந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ஸ்கோர் எடுக்கும் பட்சத்தில் மீண்டும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும் வரை சூப்பர் ஓவர் நடத்தப்படும். எனவே இம்முறை போட்டி டை’யில் ரசிகர்கள் சூப்பர் ஓவரை பார்ப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement