சொந்த ஊரில் நடக்கும் ஃபைனலை தவற விட்ட பாண்டியா.. இந்திய அணிக்கு உருக்கமான கோரிக்கை

Hardik pandya.jpeg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சகட்டமாக காணப்படுகிறது. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் இதுவரை விளையாடிய 10 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ள இந்தியா உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறது.

எனவே சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் 2003 உலகக்கோப்பை மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்விக்கு ஆஸ்திரேலியாவை பழி தீர்த்து 2011 போல இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதல் 4 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார்.

- Advertisement -

உருக்கமான கோரிக்கை:
இருப்பினும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் துரதிஷ்டவசமாக காயமடைந்த அவர் பாதியிலேயே வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ஷமி அந்த குறை கொஞ்சமும் தெரியாத அளவுக்கு அடுத்த 6 போட்டியில் கில்லியாக செயல்பட்டு 23* விக்கெட்டுகளை எடுத்து ஏராளமான சாதனைகளுடன் இந்தியாவுக்கு தரமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார்.

மறுபுறம் காயத்தால் நல்ல ஃபார்மில் இருந்தும் இந்தியாவுக்காக கோப்பையை வெல்வதற்கு ஃபைனலில் விளையாடுவதற்கான வாய்ப்பை ஹர்திக் பாண்டியா தவற விட்டார். இருப்பினும் தம்முடைய சொந்த ஊரான குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெறும் இந்த போட்டியில் அவர் ரசிகனாக வந்து இந்திய அணிக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் கொடுப்பதற்கு தயாராகி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் குழந்தையாக இருக்கும் போது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட நாம் நமக்காக மட்டுமல்லாமல் நம்முடைய ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக இந்த சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி தம்முடைய ட்விட்டரில் அவர் வீடியோ பதிவில் பேசியுள்ளது பின்வருமாறு. “இந்த அணியை பற்றி இதற்கு மேல் நான் பெருமையாக இருந்திருக்க முடியாது”

இதையும் படிங்க: உலகக்கோப்பை 2023 : விராட் கோலி கையில் கட்டி இருக்கும் இந்த ரிஸ்ட் பேண்டை கவனிச்சீங்களா – அது எதற்கு தெரியுமா?

“இதுவரை நாங்கள் செய்தவை அனைத்துக்குப் பின்னால் பல வருட கடின உழைப்பின் பெருமை இருக்கிறது. சிறு வயதிலிருந்தே நாம் கனவு கண்ட சிறந்த வாய்ப்பு ஒன்றை செய்வதிலிருந்து ஒரு படி தொலைவில் மட்டுமே இருக்கிறோம். கோப்பையை நமக்காக மட்டுமல்லாமல் நாம் பின்னே இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்காக வெல்ல வேண்டும். என்னுடைய இதயத்திலிருந்து எப்போதும் உங்களுக்கு அன்பு மற்றும் ஆதரவுடன் இருப்பேன். தற்போது கோப்பையை வீட்டுக்கு கொண்டு வாருங்கள். ஜெய்ஹிந்த்” என்று கூறியுள்ளார்.

Advertisement