சம்பளம் தான் கிடைக்கல.. இதாச்சும் கிடைச்சுதே.. தோற்ற பாகிஸ்தானுக்கு ஐசிசி கொடுத்த ஆறுதல் பரிசு எவ்வளவு?

Pakistan ICC
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் லீக் சுற்றில் முடிவில் தேவையான வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

மறுபுறம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை போன்ற படுதோல்விளை சந்தித்து வெளியேறின. அதில் 1992 போல கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்ற சாவலுடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறியது.

- Advertisement -

ஆறுதல் பரிசு:
குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக 191 ரன்களுக்கு சுருண்டு வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக உலகக் கோப்பையில் அவமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக தோல்வியை பதிவு செய்தது. அதனால் கடைசியில் இங்கிலாந்துக்கு எதிராக 6.2 ஓவரில் 338 ரன்களை சேசிங் செய்தால் செமி ஃபைனல் செல்லலாம் என்ற அசத்தியமான சூழ்நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் மீண்டும் 224 ரன்களுக்கு சுருண்டு தோற்றது.

அந்த வகையில் ஆறுதல் வெற்றியை கூட பெறாத பாகிஸ்தான் மிகப்பெரிய ஏமாற்றங்கள் மற்றும் விமர்சனங்களுடன் நாடு திரும்பியது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி கொடுத்த ஆறுதல் பரிசை பற்றி பார்ப்போம். இத்தொடரில் லீக் சுற்றில் தோல்வியை சந்தித்து வெளியேறும் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் பரிசு தொகையை ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

அது போக லீக் சுற்றில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வெற்றிக்கும் அந்த அணிகளுக்கு தலா 40,000 டாலர் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த உலக கோப்பையில் பதிவு செய்த 4 வெற்றிகளுக்காக 1,60,000 டாலர் மற்றும் லீக் சுற்றில் போராடி வெளியேறியதற்காக 1 லட்சம் டாலர் என மொத்தம் 2,60,000 டாலர் பரிசுத்தொகையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கவலைப்படாதீங்க நியூஸிலாந்து அதுல வீக்கா இருக்காங்க.. இம்முறை வெற்றி நமதே.. ஆகாஷ் சோப்ரா அதிரடி கருத்து

இது பாகிஸ்தான் ரூபாயில் சுமார் 7,33,41,580 ஆகும். முன்னதாக கடந்த 5 மாதங்களாக பாகிஸ்தான் வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் இது பற்றி பாபர் அசாம் பாகிஸ்தான் வாரிய தலைவருக்கு மெசேஜ் செய்தும் எந்த பதிலும் வரவில்லை என்றும் முன்னாள் வீரர் ரசித் லதீப் மோசமான பின்னணி கருத்தை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் சமீப காலங்களாக சம்பளத்தை பெறாமல் நாட்டுக்காக இலவசமாக விளையாடிய பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தத் தொகை ஆறுதலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement