IPL 2023 : இது மட்டும் நடந்தா இன்றே உதயமாகும் சிஎஸ்கே பிளே ஆஃப் கனவு – லக்னோ, மும்பைக்கு அதிகரிக்கும் வாய்ப்பு, விவரம் இதோ

CskvsMi
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் 10 அணிகள் விளையாடுவதால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை விட மும்மடங்கு போட்டி காணப்படும் நிலையில் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்த டெல்லி முதல் அணியாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதே போல கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் ஏற்கனவே முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அத்துடன் குஜராத்திடம் கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் 12 போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுவதால் அந்த அணியின் ப்ளே ஆப் சுற்றும் வாய்ப்பும் ஏற்கனவே முடிந்து விட்டது. அந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற காலியாக உள்ள எஞ்சிய 3 இடங்களுக்கு புள்ளி பட்டியலில் தற்சமயத்தில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் சென்னை, லக்னோ, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 7 அணிகளுக்கு வாய்ப்புள்ளது. ஆனால் அதில் நேற்று டெல்லியிடம் தோல்வியை சந்தித்த பஞ்சாப் 13 போட்டிகளின் முடிவில் 7 தோல்விகளை பெற்றதால் கடைசி போட்டியில் வென்றாலும் பிளே ஆஃப் செல்ல 5 – 10% மட்டுமே வாய்ப்புள்ளது.

- Advertisement -

இன்றே உதயமாகும்:
அதே போலவே 13 போட்டிகளில் தலா 6 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்த ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளும் தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாலும் 5 – 10% மட்டுமே வாய்ப்புள்ளதால் அந்த அணிகளின் பிளே ஆப் வாய்ப்பும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றே சொல்லலாம். இந்நிலைமையில் 12 போட்டிகளில் தலா 6 வெற்றி தோல்விகளை பதிவு செய்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று நடைபெறும் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியிலும் குஜராத்துக்கு எதிராக நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று தங்களுடைய லட்சியம் முதல் கோப்பையை வெல்லும் பயணத்தில் தொடர்ந்து போராட 100% வாய்ப்புள்ளது.

ஒருவேளை இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோற்றால் அத்தோடு அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு 100% முடிந்து லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகி விடும். அத்துடன் ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகளும் அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறி விடும். அதே சமயம் தற்போது புள்ளி பட்டியலில் தலா 15 புள்ளிகளுடன் 2 மற்றும் 3வது இடங்களில் இருக்கும் சென்னை மற்றும் லக்னோ தங்களுடைய கடைசி போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக இன்றே பிளே ஆப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறும்.

- Advertisement -

அதனால் டெல்லிக்கு எதிரான கடைசி போட்டியில் சென்னையும் கொல்கத்தாவுக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டி லக்னோ தோற்றாலும் எந்த கவலையும் இல்லை. அதே போல் இன்றைய போட்டியில் பெங்களூரு தோற்றால் 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் மும்பையின் பிளே ஆஃப் வாய்ப்பு 90% உறுதியாகி விடும். ஒருவேளை இன்றைய போட்டியில் பெங்களூரு வென்றால் இந்த 3 அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல தங்களுடைய கடைசி போட்டிகளில் வெல்ல வேண்டும்.

அத்துடன் குவாலிபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கு ஏற்கனவே குஜராத் மறைமுகமாக தகுதி பெற்றுள்ள நிலையில் 2வது அணியாக விளையாடும் வாய்ப்பை பெற அந்த 3 அணிகளும் தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டும். அந்த வகையில் தற்போதைய நிலைமையில் குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெற சென்னை தன்னுடைய கடைசி போட்டியில் டெல்லியை தோற்கடித்தால் 45% வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:IPL 2023 : இது மட்டும் நடந்தா இன்றே உதயமாகும் சிஎஸ்கே பிளே ஆஃப் கனவு – லக்னோ, மும்பைக்கு அதிகரிக்கும் வாய்ப்பு, விவரம் இதோ

அதே போல கொல்கத்தாவுக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் வென்றால் குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெற லக்னோவுக்கு 40% வாய்ப்புள்ளது. இருப்பினும் அந்தப் போட்டிக்கு தகுதி பெற மும்பைக்கு தன்னுடைய கடைசி போட்டியில் வென்றாலும் 10% மட்டுமே வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement