மன்னிச்சுடுங்க அப்படி செஞ்சுருக்கக்கூடாது.. இங்கிலாந்து வீரரிடம் ஓப்பனாக சாரி கேட்ட க்ளஸென்.. நடந்தது என்ன?

Henrich Klassen
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 21ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்து ஆச்சரியத்தை கொடுத்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கி 400 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஹென்றிச் க்ளாஸென் சதமடித்து 109 ரன்களும் ஹென்றிக்ஸ் 85 ரன்களும் மார்க்கோ யான்சன் 75* ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் துரத்திய இங்கிலாந்து ஆரம்பம் முதலே சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 22 ஓவரில் ஆல் அவுட்டாகி கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

வெளிப்படையான மன்னிப்பு:
அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க் வுட் 43* ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக அப்போட்டியில் நல்ல ஃபார்மில் இருக்கும் கிளாசின் மிடில் ஓவர்களில் களமிறங்கி இங்கிலாந்து பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி 61 பந்துகளில் சதமடித்தார்.

அப்போது அதை இங்கிலாந்து பவுலர் மார்க் வுட் முகத்தில் பன்ச் விட்டு பேட்டை சுழற்றுவது போல் காற்றில் செய்து அவர் வெறித்தனமாக கொண்டாடினார். இருப்பினும் ஏற்கனவே அடி வாங்கிக் கொண்டிருந்த இங்கிலாந்துக்கு எதிராக அவர் அவ்வாறு கொண்டாடியது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்போட்டியில் பேட்டிங் செய்யும் போது மார்க் வுட் தம்முடைய கால்களில் அடித்ததால் ஏற்பட்ட வலியில் வெறித்தனமாக விளையாடி சதமடித்த போது அவ்வாறு கொண்டாடியதாக க்ளாஸென் கூறியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அந்த சமயத்தில் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்று தெரிவிக்கும் அவர் இதற்காக மார்க் வுட் மற்றும் இங்கிலாந்து அணியிடம் நேராக மன்னிப்பு கேட்டதாக போட்டியின் முடிவில் வெளிப்படையாக பேசியது பின்வருமாறு. “போட்டி முடிந்ததும் உடனடியாக நான் மார்க்கிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் என்னுடைய காலில் 2 முறை பந்தால் அடித்தது எனக்கு பெரிய வலியை கொடுத்தது. இருப்பினும் அவரிடமும் இங்கிலாந்து வீரர்களிடமும் அவ்வாறு நடந்து கொண்டதற்காக வருந்துகிறேன்”

இதையும் படிங்க: பேட்ஸ்மேனா மட்டுமல்ல ரோஹித் சர்மா இந்த விஷயத்திலும் கலக்குறாரு – ஆடம் கில்க்ரிஸ்ட் பாராட்டு

“ஆனாலும் களத்தில் பரபரப்பான தருணங்களில் சில நேரங்களில் உங்களையும் கட்டுப்படுத்த முடியாமல் இது போன்ற உணர்ச்சிகள் வெளியே வந்து விடும். எனவே போட்டியின் முடிவில் நான் அவரிடம் அது பற்றி பேசினேன். அதனால் அனைத்தும் இங்கேயே முடிந்து விட்டது என்று நம்புகிறேன்” என கூறினார். இந்த நிலைமையில் 3வது வெற்றியை பதிவு செய்த தென்னாபிரிக்கா வெற்றிப்பாதைக்கு திரும்பிய நிலையில் இங்கிலாந்து 3வது தோல்வியை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement