ஒரு நாள் முழுவதும் டிராவிட் மற்றும் லக்ஷமணன் அன்னைக்கு ஒரு மேஜிக்கே பண்ணிட்டாங்க – நினைவு கூர்ந்த ஹேமங் பதானி

Hemang-Badani
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த 2001-ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவத்தை தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட் வீரருமான ஹேமங் பதானி பகிர்ந்துள்ளார். இந்த விடயமானது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பினை பெற்றுள்ளது.

அந்த வகையில் கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் இந்திய அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் மூன்று விக்கெட் இழப்பிற்கு இந்தியா ஒரு கட்டத்தில் 115 ரன்கள் எடுத்து தத்தளித்த போது எப்படியும் இந்திய அணி தோல்வியை சந்தித்து விடும் என்ற நிலையில் கைகோர்த்த டிராவிட் மற்றும் லட்சுமணன் ஆகியோர் 376 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இன்றளவும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான பார்ட்னர்ஷிப்பாக பார்க்கப்படுவதோடு வரலாற்றிலும் இந்த பாட்னர்ஷிப் இடம் பிடித்துள்ளது.

இந்த போட்டியில் முச்சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வி.வி.எஸ் லட்சுமணன் 281 ரன்கள் ஆட்டம் இழந்தார். அதேபோன்று டிராவிடும் 181 ரன்களில் வெளியேறினார். இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றியும் பெற்று தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

இந்நிலையில் அந்த போட்டியில் நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதானி அதில் குறிப்பிட்டதாவது : எப்படியும் தோல்வி அடைந்து விடுவோம் என்று நினைத்து எங்களது சூட்கேசுகளை மூன்றாவது நாளிலேயே பேக் செய்து விட்டோம்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு அடுத்து 2023 உ.கோ’க்கு பின் கேப்டனாக அவர் தான் தகுதியானவர் – நட்சத்திர வீரருக்கு கவாஸ்கர் இப்போதே ஆதரவு

அதோடு நேராக மைதானத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லவும் நாங்கள் தயாராகி விட்டோம். ஆனால் வி.வி.எஸ் லட்சுமணன் மற்றும் டிராவிட் ஆகியோர் அன்றைய நாள் முழுவதும் ஒரு விக்கெட் கூட இழக்காமல் மேஜிக் செய்தது போல் பேட்டிங் செய்தனர் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தனது நினைவினை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement