ரோஹித் சர்மாவுக்கு அடுத்து 2023 உ.கோ’க்கு பின் கேப்டனாக அவர் தான் தகுதியானவர் – நட்சத்திர வீரருக்கு கவாஸ்கர் இப்போதே ஆதரவு

Sunil-Gavaskar
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறை உருவாக்கும் வேலைகள் ஏற்கனவே துவங்கியுள்ளது. குறிப்பாக உலகக்கோப்பை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக விமர்சனங்களை சந்தித்த விமர்சனங்களால் படிப்படியாக கேப்டன்ஷிப் பதவிகளை துறந்த விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் சாதாரண இருதரப்பு தொடர்களில் வென்ற இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வழக்கமான தோல்விகளை சந்தித்து எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதை நிரூபித்தது.

Shubman-Rohit-Ishan

அந்த தோல்விக்கு பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்ததால் கடுப்பான ரசிகர்களைப் போலவே அதிருப்தியகடைந்த பிசிசிஐ 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய டி20 அணியை உருவாக்கும் வேலையை துவங்கியுள்ளது. அத்துடன் ஏற்கனவே 36 வயதை கடந்து விட்ட ரோகித் சர்மாவுக்கு 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் கடைசி முறையாக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:
ஒருவேளை அதில் வெற்றியை பதிவு செய்ய தவறும் பட்சத்தில் ஏற்கனவே 36 வயதாகி விட்ட அவருக்கு பதிலாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய கேப்டனையும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவை முழு நேர கேப்டனாகவும் அறிவிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த முழுநேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்படுவதற்கான அனைத்து சூழல்களும் இப்போதே பிரகாசமாகியுள்ளன.

INDia Hardik pandya

இந்நிலையில் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் முதல் வருடத்திலேயே கேப்டனாக குஜராத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டிலும் சமீபத்திய டி20 தொடர்களில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஹர்திக் பாண்டியா 2023 உலகக் கோப்பைக்கு பின் ஒருநாள் கேப்டனாகவும் பொறுப்பேற்க தகுதியானவர் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். குறிப்பாக ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மார்ச் 17ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் 2023 உலக கோப்பைக்கு பின் பாண்டியாவை ஒருநாள் கேப்டனாக அறிவிக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“குஜராத் அணிக்காகவும் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டிலும் அவருடைய கேப்டன்ஷிப் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. எனவே மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் அவர் வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் 2023 உலக கோப்பைக்கு பின் நீங்கள் அவரை இந்தியாவின் கேப்டனாக தாராளமாக அறிவிக்கலாம் என்று நான் நம்புகிறேன். ஹர்டிக் பாண்டியா கேப்டனாக இருக்கும் போது இதர அணியினர் கச்சிதமாக உணர்வதை பார்க்க முடிகிறது. ஒருவேளை இது தான் அவர் தனது வீரர்களை கையாளும் விதமாக இருக்கலாம்”

Gavaskar

“அவர் அனைத்து வீரர்களின் தோள் மீது கை போட்டு அவர்கள் சௌகரியத்துடன் செயல்பட வழி வகுக்கிறார். அது இருந்தால் தான் ஒரு வீரரால் இயற்கையாக சிறப்பாக செயல்பட முடியும். அவர் இந்திய அணி வீரர்களை உத்வேகப்படுத்துவதை பார்ப்பது மிகச் சிறப்பாக உள்ளது. அத்துடன் அவர் அணியின் மிடில் ஆர்டரில் ஆட்டத்தை மாற்றக்கூடிய முக்கியமான வீரராகவும் உள்ளார். குஜராத் அணியிலும் அவர் தேவைப்படும் நேரத்தில் பேட்டிங் வரிசையில் தன்னை முன்கூட்டியே களமிறக்கி அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்”

இதையும் படிங்க:IND vs AUS : நான் கத்துக்கொடுத்த பேட்டிங் டெக்னிக்கை வெச்சு எங்களையே தோற்கடுச்சுட்டாரு – இந்திய வீரரை பாராட்டும் பாண்டிங்

“எனவே ஒருவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இதர வீரர்களிடம் கேட்காமல் தாமாக முக்கிய வேலையை முன்னின்று செய்யக்கூடிய தன்மை மிகவும் முக்கியமானதாகும். அதனால் இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அழுத்தமான நேரத்தில் பாண்டியா கேப்டனாக தங்களை விளையாட உட்படுத்துவதை விட தமக்கு தாமே உட்படுத்தி விளையாடுகிறார் என்பதை அழுகிறார்கள். எனவே அந்த பண்பை ஹர்திக் பாண்டியா கொண்டுள்ளது மிகவும் முக்கியமானதாகும்” என்று கூறினார்.

Advertisement