IND vs AUS : நான் கத்துக்கொடுத்த பேட்டிங் டெக்னிக்கை வெச்சு எங்களையே தோற்கடுச்சுட்டாரு – இந்திய வீரரை பாராட்டும் பாண்டிங்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா கடந்த 10 வருடங்களாக உலகில் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. இருப்பினும் இத்தொடரின் 3வது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் கடைசி போட்டி ட்ராவில் முடிந்தாலும் இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் கோப்பையை வெல்வதற்காக மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.

IND vs AUS

- Advertisement -

முன்னதாக இத்தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக ஜொலித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதுகின்றனர். அதே போல் 2வது ஸ்பின்னராக விளையாட தேர்வான அக்சர் பட்டேல் அஸ்வின் – ஜடேஜா ஆகியோர் கொத்தாக விக்கெட்டுகளை எடுத்ததால் பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் பேட்டிங்கில் நாக்பூர் மற்றும் டெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் 84, 74 ரன்களை எடுத்து முதன்மை பேட்ஸ்மேன்களை விட அட்டகாசமாக செயல்பட்ட அவர் ஆரம்பத்திலேயே வெற்றிகளை பெற்று தொடரை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

முக்கிய டெக்னிக்:
அந்த வகையில் மொத்தம் 264 ரன்களை எடுத்த அவர் இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த 2வது இந்திய வீரராக அசத்தியுள்ளார். அதனால் 2 – 1 (4) கணக்கில் இந்தியா இந்த தொடரை வெல்வதற்கு அக்சர் படேல் தான் முக்கிய காரணம் என்று சபா கரீம், தினேஷ் கார்த்திக் போன்ற முன்னாள் வீரர்கள் வெளிப்படையாக பாராட்டினர். இந்நிலையில் கடந்த 2013 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இணைந்தது முதல் தற்போது டெல்லி அணியில் விளையாடுவது வரை அக்சர் படேலை இளம் வயதிலிருந்தே பார்த்து வருவதாக தெரிவிக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் திறமை இருந்தும் அவர் சரியான பேட்டிங் டெக்னிக் தெரியாமல் தடுமாறியதாக கூறியுள்ளார்.

Axar Patel 1

ஆனால் டெல்லி அணியின் பயிற்சியாளராக வந்த பின் கடந்த சில வருடங்களாக இடுப்பு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தி பேட்டிங்கில் முக்கிய டெக்னிக்கை கற்றுக் கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் அதை பயன்படுத்தி தங்களது ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்கும் அளவுக்கு அக்சர் பட்டேல் செயல்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக சற்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அக்சர் படேலை எனக்கு நீண்ட காலமாக தெரியும். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் முதல் முறையாக நான் இணைந்த போது அவர் மிகவும் இளம் பையனாக இருந்தார். அப்போது அவரிடம் உண்மையாகவே குறிப்பிட்ட சில பேட்டிங் திறமைகள் இருப்பதை நான் அறிந்து கொண்டேன். இருப்பினும் கடந்த சில வருடங்களை தவிர்த்து அவர் அதை ஐபிஎல் அல்லது சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்தவில்லை. அதன் காரணமாக டெக்னிக்கல் அளவில் அவரது பேட்டிங்கில் நாங்கள் சில சிறிய மாற்றங்களை செய்தோம்”

Ponting

“குறிப்பாக அவருடைய இடுப்பையும் தோள்பட்டையையும் அகன்ற கோணத்தில் எளிதாக பேட்டிங் செய்வதற்காக கொஞ்சம் கொஞ்சமாக திறந்தோம். அதன் காரணமாக அவர் தனது மார்புகளை சற்று அதிகமாக பயன்படுத்தி இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை சற்று அதிகமாக எதிர்கொள்ளும் வாய்ப்பை பெற்றார்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஆரம்ப காலங்களில் அக்சர் பட்டேல் இந்தளவுக்கு பேட்டிங்கில் அசத்தலாக செயல்படவில்லை.

இதையும் படிங்க:அவர் ஏன் இந்திய அணியில் விளையாடல, என் கேரியர் மாதிரி அவரையும் முடிச்சுராதீங்க – இளம் வீரருக்கு முரளி விஜய் ஆதரவு

இருப்பினும் கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லி அணியில் இணைந்த பின்பு தான் பேட்டிங்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணியிலும் அவர் ஓரளவு நிலையான இடத்தை பிரித்து வருகிறார். இதனுடைய பின்னணியில் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் பயிற்சிகள் இருப்பது பாராட்டத்தக்கதாகும்.

Advertisement