SRH vs DC : என்னோட ஸ்பெஷலே இதுதான். டெல்லி அணியை பந்தாடிய கிளாசன் – அதிரடி பேட்டி

Klassen
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது.

SRH vs DC

- Advertisement -

சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் அபிஷேக் சர்மா 67 ரன்களையும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிளாசன் 53 ரன்களையும் குவித்தனர். பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்ததால் 9 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் துவக்க வீரரான அபிஷேக் சர்மாவை தவிர்த்து மிடில் ஆர்டரில் எந்த ஒரு வீரரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்காமல் சொதப்பி வந்த வேளையில் கிளாசன் மட்டும் 27 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 53 ரன்கள் குவித்து அதிரடி காட்டியதால் சன் ரைசர்ஸ் அணி 190 ரன்களை கடந்தது.

Klassen 1

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய எய்டன் மார்க்ரம் கூறுகையில் : ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் முழு பங்களிப்பினையும் அளித்துள்ளோம். அனைத்து வீரர்களும் தங்களது திறனை இந்த போட்டியில் வெளிப்படுத்தி உள்ளனர். என்னை பொறுத்தவரை என்னுடைய பேட்டிங் ஆப்ரோச் இந்த போட்டியில் ஒன்றே ஒன்றுதான்.

- Advertisement -

முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் என்னுடைய திறன் மீது நம்பிக்கை வைத்து நான் விளையாடினேன். அபிஷேக் ஷர்மா ஆரம்பத்திலிருந்து மிகச் சிறப்பாக விளையாடி வந்ததால் அவருடைய ஆட்டத்தை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் ரண்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதினாலேயே நான் அதிரடியாக விளையாடினேன்.

இதையும் படிங்க : IPL 2023 : அவர் கையால் ரன் அவுட்டானதை 20 வருசம் கழிச்சு கூட பெருமையா நினைப்பேன் – துருவ் ஜுரேல் நெகிழ்ச்சி

அதோடு ஸ்பின் பவுலர்களுக்கு எதிராக நான் எப்பொழுதுமே நன்றாக விளையாடக்கூடியவன் இந்த விக்கெட்டும் எனக்கு என்னுடைய பேட்டிங் ஸ்டைலுக்கு கை கொடுத்ததால் என்னால் அதிரடியாக விளையாட முடிந்தது என கிளாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement