IPL 2023 : அவர் கையால் ரன் அவுட்டானதை 20 வருசம் கழிச்சு கூட பெருமையா நினைப்பேன் – துருவ் ஜுரேல் நெகிழ்ச்சி

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2008க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு எதிராக நடைபெற்ற 8வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் அந்த அணியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து அசத்தியது. அந்தப் போட்டியில் 2019 முதல் 5 வருடங்களாக தொடர்ந்து வாய்ப்பு பெற்று சுமாராகவே செயல்பட்டு பின்னடைவை ஏற்படுத்தி வரும் ரியன் பராக்கிற்கு பதிலாக துருவ் ஜுரேல் வாய்ப்பு பெற்று கடைசி நேரத்தில் களமிறங்கி 3 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 34 (15) ரன்கள் விளாசினார்.

அவரது சிறப்பான பினிஷிங் காரணமாக ஜெய்ப்பூரில் முதல் முறையாக 200 ரன்களை அடித்த அணியாக சாதனை படைத்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 202/5 ரன்கள் குவித்தது. அதை துரத்திய சென்னைக்கு சிவம் துபே 52 (33) ரன்களும் ருதுராஜ் 47 (29) ரன்கள் எடுத்த போதிலும் டேவோன் கான்வே 8 (16) ரகானே 15 (13) ராயுடு 0 (2) என முக்கிய வீரரகள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 170/6 ரன்கள் மட்டுமே எடுத்து பினிஷிங் செய்ய முடியாமல் தோற்றது.

- Advertisement -

பெருமை படுவேன்:
முன்னதாக அந்த போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய துருவ் ஜுரேல் கடைசி ஓவரில் சிங்கிள் எடுக்க முயற்சித்த போது விக்கெட் கீப்பராக நின்ற கேப்டன் எம்எஸ் தோனி வழக்கம் போல தன்னுடைய ஒற்றைக் கையுறையை கழற்றி பந்தை சரியாகப் பிடித்து ஸ்டம்புகளை குறி பார்த்து எறிந்து ரன் அவுட் செய்தார். அந்த நிலையில் இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று ஐபிஎல் தொடரிலும் 4 சாம்பியன் பட்டங்கள் வென்று ஜாம்பவானாக திகழும் தோனிக்கு முன்பாக இப்போட்டியில் பேட்டிங் செய்தது பெரிய உத்வேகத்தை கொடுத்ததாக துருவ் ஜுரேல் கூறினார்.

அதாவது பல இளம் வீரர்கள் மற்றும் ரசிகர்களை போலவே இளம் வயதில் இருந்து பார்த்து வளர்ந்த தம்முடைய ரோல் மாடலான தோனிக்கு முன்பாக சிறப்பாக பேட்டிங் செய்தது மகிழ்ச்சியளித்ததாக தெரிவித்த அவர் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “என்னுடைய அணி வெற்றியில் பங்காற்றியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொடருக்காக நான் தினம்தோறும் 3 – 4 மணி நேரங்கள் தொடர்ந்து கடுமையாக பயிற்சிகளை எடுத்து வருகிறேன். அந்த வகையில் சிறப்பாக பேட்டிங் செய்தால் மற்ற அனைத்தும் தாமாக நடக்கும் என்பதே என்னுடைய தாரக மந்திரம். குறிப்பாக கடைசி சில ஓவர்களில் விளையாடும் இந்த இடத்தை ராஜஸ்தான் நிர்வாகம் எனக்கு கொடுத்துள்ளது”

- Advertisement -

“எனவே அதற்கேற்றார் போல் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிக்கும் வகையில் நான் பயிற்சிகளை எடுத்துள்ளேன். அத்துடன் எனக்கு பின்னே தோனி நின்றது மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. குறிப்பாக தோனி விளையாடிய இந்த மைதானத்தில் நானும் விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். நான் அவரை சிறுவயதிலிருந்தே ரசித்து வருகிறேன். அவர் இப்போட்டியில் எனது பேட்டிங்கை பார்த்தது எனக்கு பெரிய மகிழ்ச்சியாகும்” என்று கூறினார்.

அந்த நிலையில் அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டிக்காக வான்கடே மைதானத்துக்கு ராஜஸ்தான் அணியினர் புறப்பட்டு சென்றனர். அப்போது ராஜஸ்தான் அணி நிர்வாகம் எடுத்த வீடியோவில் கடந்த போட்டியில் தோனி தம்மை ரன் அவுட் செய்ததை 20 வருடங்கள் கழித்து பார்த்தாலும் பெருமைப்படுவேன் என்று அவர் மீண்டும் ரசிகனைப் போல் மகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: CSK vs PBKS : கடைசி பந்து வரை போராடி வெற்றியை பரிசளித்த சிஎஸ்கே – சேப்பாக்கத்தில் பஞ்சாப் வரலாற்று வெற்றி பெற்றது எப்படி

“அந்த போட்டியின் ஸ்கோர் கார்டை 20 வருடங்கள் கழித்து நான் பார்ப்பேன். அப்போது அது தோனி சார் என்னை ரன் அவுட் செய்தார் என்று சொல்லும் போது நான் மிகவும் பெருமைப்படுவேன். ஏனெனில் தோனி சாரின் பெயருக்கு அடுத்த படியாக என்னுடைய பெயர் இருக்கும். அதுவே எனக்கு போதுமானது” என்று கூறினார்.

Advertisement