IND vs AFG : நாங்க நெனச்சத எங்களால செய்ய முடியல. இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ஆப்கான் கேப்டன் பேட்டி

Shahidi
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் 9-ஆவது ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அந்த வகையில் நேற்று டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்களையும், அஹ்மத்துல்லா ஓமர்சாய் 62 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 35 ஓவர்களிலேயே 2 விக்கெட்டை மட்டும் இழந்து 273 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 131 ரன்களையும், விராட் கோலி 55 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி கூறுகையில் : இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக பெரியது என்பது எங்கள் தெரியும். 300 ரன்களை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மனதில் இருந்தது.

- Advertisement -

ஆனால் அந்த இலக்கை எங்களால் தொட முடியாமல் போனது. இந்த மைதானம் பேட்டிங்க்கு நன்றாகவே ஒத்துழைத்ததால் நிறைய ரன்கள் அடித்தால் நிச்சயம் எதிரணிக்கு அழுத்தத்தை தரலாம் என்று நினைத்தோம். ஆனால் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து நாங்கள் மூன்று விக்கெட்டுகளை இழக்கவே அஹ்மத்துல்லா உள்ளே வந்ததும் டாட் பாலை பற்றி கவலைப்பட வேண்டாம்.

இதையும் படிங்க : CWC 2023 : 2019இல் ஸ்மித் 2023இல் நவீன்.. தங்கமான குணத்தால் மனதளவிலும் கிங்’காக திகழும் விராட் கோலி

அதனை நம்மால் நிவர்த்தி செய்ய முடியும். எனவே தற்போது நமக்கு அவசியம் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் தான் என்று கூறி விளையாடினேன். இன்னும் ஏழு போட்டிகள் எங்களுக்கு இருக்கிறது நிச்சயம் அதில் சிறப்பாக விளையாடி மீண்டும் வருவோம் என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement