வீடியோ : கேட்சை விட்டதால் கோட்டை விட்ட பாகிஸ்தான். தோல்விக்கு காரணமான ஒரு பந்து – வைரலாகும் வீடியோ

Hasan-ali
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான இரண்டாவது அரையிறுதி போட்டி பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்து அசத்தியது.

pakvsaus

அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரர் ரிஸ்வான் 67 ரன்களும், பக்கர் சமான் ஆட்டமிழக்காமல் 55 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது வார்னர் கொடுத்த அபார துவக்கம் காரணமாக ஆரம்பத்திலிருந்தே ரன்களை குவித்து வந்தது. இருப்பினும் இடையிடையே விக்கெட்டுகள் விழுந்தால் ஆஸ்திரேலிய அணி முதலாவது பாதியில் சற்று இக்கட்டான சூழலை சந்தித்திருந்தது.

- Advertisement -

10.1 ஓவர்கள் முடிந்த வேளையில் 89 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி போராடி கொண்டிருந்தது. இந்நிலையில் 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிக்கொண்டிருந்த வேளையில் இறுதியில் ஜோடி சேர்ந்த ஸ்டாய்னிஸ் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் முறையே 40 மற்றும் 41 ரன்கள் குவித்து 19ஆவது ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிலும் குறிப்பாக போட்டியின் முடிவை ஒரே பந்து மாற்றியது என்று கூறலாம். ஏனெனில் வெற்றிக்கு 12 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் 19வது ஓவரின் 3-வது பந்தை வீசிய சாகின் அப்ரிடி சிறப்பாக பந்து வீச அதனை எதிர்த்து விளையாடிய மேத்யூ வேட் கேட்ச் ஒன்றினை கொடுத்தார். ஆனால் அதனை ஹசன் அலி பிடிக்க தவறிவிட்டார். அந்த பந்தில் 2 ரன்கள் கிடைக்க அடுத்த மூன்று பந்துகளையும் வேட் சிக்சருக்கு விரட்டி ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதையும் படிங்க : பி.சி.சி.ஐ-யை மறைமுகமாக விமர்சித்துள்ள சஞ்சு சாம்சன் – பாத்துங்க இப்படி பண்ணா டீம்ல சேக்கவே மாட்டாங்க

ஹசன் அலி அந்த கேட்சை மட்டும் பிடித்து இருந்தால் நிச்சயம் போட்டி பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்து இருக்கும். ஆனால் அவர் அந்த கேட்சை பிடிக்க தவற அடுத்த மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி ஒரு ஓவர் முன்னதாகவே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. முக்கியமான கட்டத்தில் ஹசன் அலி தவறவிட்ட இந்தக் கேட்ச் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement