பி.சி.சி.ஐ-யை மறைமுகமாக விமர்சித்துள்ள சஞ்சு சாம்சன் – பாத்துங்க இப்படி பண்ணா டீம்ல சேக்கவே மாட்டாங்க

Samson
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடரானது வரும் 17ஆம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. ரோகித் சர்மா தலைமையில் 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் உலக கோப்பை தொடரில் விளையாடிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய சில வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ள, அனுபவ வீரரான சஞ்சு சாம்சனுக்கு இடம் வழங்கப்படவில்லை. இது குறித்து ரசிகர்கள் சிலர் கேள்வி கேட்டு வந்த நிலையில் சஞ்சு சாம்சனும் தனது பங்கிற்கு ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தின் மூலம் பிசிசிஐ தேர்வாளர்கள் விமர்சிக்கும் வகையில் மறைமுகமாக தாக்கியுள்ளார்.

- Advertisement -

அவரின் இந்தப்பதிவு தேர்வாளர்களை சீண்டும் படியாக இருந்தது. அதுமட்டுமின்றி அவருக்கு ஆதரவாக ரசிகர்களும் அந்த டுவிட்டர் பதிவிற்கு பதில் கொடுத்து வருகின்றனர். தன்னை ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே நினைத்து இந்திய அணி ஒதுக்கி வருவதால் நானும் ஒரு சிறந்த பீல்டர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்யும் படி இருக்கும் 3 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதன்மூலம் அவர் அணியில் ஒரு பேட்ஸ்மேனாக தன்னை தேர்வு செய்திருக்கலாமே என்பதுபோல மறைமுகமாக தேர்வாளர்களை தாக்கும் படி இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த விஷயத்தை பிசிசிஐ சற்று சீரியஸாக எடுத்து ஆராய்ந்தால் அவர் இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக புறக்கணிக்க படுவார் என்பதும் அவர் அணியில் மீண்டும் தேர்வுசெய்யப்பட மாட்டார் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

- Advertisement -

இதையும் படிங்க : நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் இருந்து இந்திய இந்த விஷயத்தை கத்துக்கனும் – சேவாக் பளீர்

ஏனெனில் ஏற்கனவே இதே போன்று 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராயுடு கடைசி நேரத்தில் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பதால் பிசிசிஐ-யை விமர்சித்து ராயுடு ட்வீட் செய்து இருந்தார். அப்போது அது பெரிய பிரச்சனையாகி ராயுடுவின் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement