நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் இருந்து இந்திய இந்த விஷயத்தை கத்துக்கனும் – சேவாக் பளீர்

Sehwag
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்றோடு இந்திய அணி வெளியேறியது. அதனை தொடர்ந்து தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வரும் சேவாக் இந்திய ரசிகரின் ஒரு கேள்விக்கு சிறப்பான பதில் ஒன்றினை அளித்துள்ளார்.

sky

- Advertisement -

அதன்படி அந்த ரசிகர் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் இருந்து எந்த விடயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த சேவாக் கூறுகையில் : உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்திய அணி எந்த ஒரு அணியிடம் இருந்தும் எந்த விஷயத்தையும் கற்க வேண்டிய அவசியமில்லை.

இந்திய அணிக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தும் வலிமை உள்ளது. அந்த அளவிற்கு நமது அணி சிறப்பான ஒரு டீம் தான். இருப்பினும் இந்த தொடரில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயம் யாதெனில் பாசிட்டிவாக இருப்பது மட்டும்தான்.

ashwin

ஏனெனில் எப்போதுமே ஆட்டத்தை பாசிட்டிவாக விளையாடுவது ஷாட்டர் பார்மட் கிரிக்கெட்டில் அவசியம். துணிச்சலாக விளையாடினால் மட்டுமே ரிஸ்க் எடுக்க முடியும். அப்படி ரிஸ்க் எடுக்கும் போதுதான் வீரர்களின் உண்மையான ஆட்ட திறனும் வெளிப்படும் என்று சேவாக் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement