கிரிக்கெட்டின் அதிர்ஷ்டம் நிறைந்த ராசியான மாதம் ஜூலையா – ரசிகர்களை வியக்க வைக்கும் ஒரு அலசல்

Ganguly-dhoni
- Advertisement -

மனிதனாக பிறக்கும் அனைவருமே தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக பல்வேறு துறைகளில் பல்வேறு வேலைகளில் ஈடுபடுகின்றனர். எந்த துறையாக இருந்தாலும் ஆர்வத்துடன் தோல்விகளிலும் தன்னம்பிக்கை குறையாமல் விடாமுயற்சியுடன் கடுமையாக உழைத்தால் நிச்சயம் ஒருநாள் வெற்றியை எட்டி விடலாம். அதுபோல கடினமாக உழைப்பவர்களை தேடித்தான் அதிர்ஷ்டமும் வருமென்று கூறுவார்கள். ஆனால் எவ்வளவு கடினமாக உழைத்தும் சற்று அதிர்ஷ்டம் கை கொடுக்காத காரணங்களால் திறமை இருந்தும் ஜொலிக்க முடியாத எத்தனையோ பேர் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரிடம் தனித்தனி திறமைகள் உள்ளது. அதற்கான வாய்ப்பு கிடைப்பவர்களே ஜொலிக்கிறார்கள், வாய்ப்பு கிடைக்காதவர்கள் விதி என்பார்கள்.

மேற்குறிப்பிட்ட அதிர்ஷ்டம், ராசி போன்றவைகளுக்கும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கும் சம்பந்தமில்லை என்று விளையாட்டு துறையில் இருக்கும் நிறைய பேர் கூறலாம். ஆனால் இங்கிலாந்தின் கிரைக் கீஸ்வெட்டர், நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் போன்ற போன்ற வீரர்கள் அவர்களிடமிருந்த திறமையால் ஜாம்பவான்களாக உருவெடுக்க வேண்டியவர்கள் ஆனால் துரதிஷ்டவசமாக காயமடைந்து ஆரம்பத்திலேயே காணாமல் போனதை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. மேலும் 998 டிஸ்மிசல்ஸ் செய்த ஜாம்பவான் மார்க் பவுச்சர் காயத்தால் 1000 என்ற எண்களை தொடமுடியவில்லை

- Advertisement -

அதேபோல் வாய்ப்பு கிடைத்தும் பெரிய அளவில் சாதித்த ஏபி டிவிலியர்ஸ், ராகுல் டிராவிட் போன்ற தரமான வீரர்கள் கடினமாக உழைத்தும் அதிர்ஷ்டமில்லை என்பதால் கடைசிவரை உலகக்கோப்பை எனும் வெற்றிக்கனியை தொடாமலேயே ஓய்வு பெற்றார்கள் என்று ரசிகர்கள் கூறுவதையும் பார்க்க முடிகிறது.

இதுபோக அவ்வப்போது களத்தில் நடைபெறும் போட்டிகளில் அவுட்டான பேட்ஸ்மேன் நோபாலில் தப்பி சதமடிப்பது போன்ற அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட அம்சங்களை நேரடியாகவே பார்க்க முடிகிறது. மொத்தத்தில் கிரிக்கெட்டிலும் அதிர்ஷ்டம், ராசி என்பது அங்கமாகவே இருக்கும் நிலையில் இன்று பிறந்துள்ள ஜூலை மாதம் கிரிக்கெட்டில் ராசியான மாதமாக இருப்பதை பார்ப்போம்.

- Advertisement -

1. இதற்கு முக்கிய காரணம் தங்களது அபாரத் திறமைகளால் சர்வதேச அரங்கில் தங்களது நாட்டுக்காக பல வெற்றிகளைத் தேடி கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சுனில் கவாஸ்கர், சௌரவ் கங்குலி, எம்எஸ் தோனி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ரிச்சர்ட் ஹாட்லீ, ஷான் பொல்லாக், ஸ்டீவ் வாக் போன்ற நிறைய ஜாம்பவான்கள் இந்த மாதத்தில் அதிகம் பிறந்துள்ளார்கள்.

2. சர்வதேச அரங்கில் நாட்டுக்காக ஒரு போட்டியில் கேப்டனாக செயல்படுவதே மிகப்பெரிய விஷயம் என்ற சூழ்நிலையில் அதிகபட்சமாக ஜூலையில் பிறந்த 6 வீரர்கள் தங்களது நாட்டுக்காக 35க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்களாக செயல்பட்டுள்ளனர். இது எஞ்சிய மாதங்களை விட அதிகமாகும். சுனில் கவாஸ்கர், சர் கேரி சோபர்ஸ், சௌரவ் கங்குலி, எம்எஸ் தோனி, ஆலன் பார்டர், பப் டு பிளேஸிஸ் என்ற 6 வீரர்களின் பெயர்களே இந்த ஜூலையின் பெருமையை பேசுகிறது.

- Advertisement -

3. அதிலும் இந்தியாவின் 3 மகத்தான ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, எம்எஸ் தோனி ஆகியோர் இம்மாதத்தின் ஜூலை 7, 8, 10 என 4 நாட்கள் இடைவெளியில் பிறந்துள்ளார்கள் என்பதும் வியப்பாகும்.

4. அதேபோல் பந்துவீச்சு துறையில் இந்த ஜூலை மாதத்தில் பிறந்த 4 பவுலர்கள் 400க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். இது ஆங்கில கேலண்டரில் இருக்கும் எஞ்சிய மாதங்களை விட அதிகமாகும். ரிச்சர்ட் ஹாட்லீ, இந்தியாவின் ஹர்பஜன் சிங், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷான் பொல்லாக் ஆகிய 4 அற்புதமான ஜாம்பவான்கள் இந்த ஜூலையில் பிறந்து 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.

- Advertisement -

4. அதிலும் குறிப்பாக ஜூலை 3-ஆம் தேதியன்று பிறந்த பவுலர்கள்தான் எஞ்சிய 364 நாட்களை (லீப் அல்லாத வருடம்) விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை சேர்ந்தார்போல் எடுத்துள்ளார்கள். இந்த நாளில் பிறந்த ரிச்சர்ட் ஹாட்லீ (431) ஹர்பஜன் சிங் (417) எவென் சாட்பீல்டு (123) ஹென்றி ஓலங்கா (68) வாசிம் ராஜா (51) சயீத் ரசல் (12) ஜேக் நியூமன் (2) என மொத்தம் 1104 விக்கெட்டுகளை எடுத்து பிரமிக்க வைக்கிறார்கள். மொத்த கேலண்டரில் இந்த நாளில் மட்டும் தான் 2 பவுலர்கள் 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்தவர்களாகப் பிறந்துள்ளார்கள்.

5. அதேபோன்ற ஆச்சரியமாக ஜூலை 2-ஆம் தேதியன்று பிறந்த பேட்ஸ்மேன்கள் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேர்ந்தார் போல் அதிக ரன்களை எடுத்துள்ளார்கள். ஜூலை 2இல் பிறந்த ஆஸ்திரேலிய சகோதரர்கள் ஸ்டீவ் வாக் (10927) மார்க் வாக் (8029) ஸ்டீவ் ஸ்மித் (8010*) ஏஞ்சலோ மேத்தியூஸ் (6776*) என 33742* ரன்களை எடுத்து வியக்க வைக்கிறார்கள். எஞ்சிய 364 நாட்களில் பிறந்த 1க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரே நாளில் இப்படி சேர்ந்தார் போல் இவ்வளவு ரன்கள் எடுத்ததில்லை.

6. அது மட்டுமல்லாமல் டென்னிஸ் லில்லி, மகாயா நிடினி ஆகிய 2 பவுலர்கள் இதே மாதத்தில் பிறந்து 350க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். எஞ்சிய மாதங்களில் 1 பவுலருக்கும் மேல் 350+ விக்கெட்களை எடுத்ததில்லை.

இதையும் படிங்க : IND vs ENG 5வது டெஸ்ட் : விலகிய ரோஹித் சர்மா – பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு, 35 வருடத்துக்கு பின் கேப்டனாகும் நட்சத்திர வீரர்

7. இதுபோக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1 போட்டியில் விளையாடுவதே பல வீரர்களுக்கு சவாலாக இருக்கும் நிலையில் 100 போட்டியில் விளையாடுவது மிகவும் கடினமாகும். அந்த வகையில் இந்த ஜூலை மாதத்தில் பிறந்த 8 வீரர்கள் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். குறிப்பாக சுனில் கவாஸ்கர், சௌரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் ஆகியோரைக் குறிப்பிடலாம். ஏப்ரலில் பிறந்த 10 வீரர்கள் 100 போட்டிக்கும் மேல் விளையாடியுள்ளார்கள். எனவே இந்தப் பட்டியலில் ஜூலை 2-வது இடம் பிடிக்கிறது.

Advertisement