- Advertisement -
ஆசிய கோப்பை

பிரசித் கிருஷ்ணாவை தாண்டி ஹர்ஷித் ராணா இந்திய அணியில் இடம்பிடிக்க இதுதான் காரணமாம் – விவரம் இதோ

2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு செய்திகள் இந்திய அணித்தேர்வு குறித்து வெளிவந்த படி இருக்கின்றன. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் குறிப்பிட்ட சில தேர்வு செய்யப்பட்டதும், குறிப்பிட்ட சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதும் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டதும் பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரிஷித் ராணா ஆசிய கோப்பையில் இடம்பெற இதுதான் காரணம் :

ஏனெனில் ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பிறகு மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக முகமது சிராஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இளம் வீரரான ஹர்ஷித் ராணாவுக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமே பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் என்ற செய்திகளும் வெளியாகி வருகின்றன.

- Advertisement -

ஏனெனில் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்ற போது அந்த அணியின் மென்டராக இருந்த கௌதம் கம்பீர் ஹர்ஷித் ராணாவுடன் இணைந்து பணியாற்றி இருந்தார். அப்போது ஹர்ஷித் ராணாவை அருகில் இருந்து பார்த்த கம்பீர் அவரது திறமையின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

23 வயதான ஹர்ஷித் ராணா மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசுவதாலும் நல்ல ஆட்டிட்யூட் வைத்திருப்பதாலுமே அவருக்கு கம்பீர் ஆதரவளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரசித் கிருஷ்ணாவை தாண்டி ஹர்ஷிதா ராணாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம்? என்பது குறித்த ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பிரசித் கிருஷ்ணா நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 15 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்ப்பிள் தொப்பியை வென்றிருந்தாலும் இளம் வீரரான ஹர்ஷித் ராணா எட்டாவது இடத்தில் களமிறங்கி ஒரு சில சிக்சர்களை அடிக்கும் வீரராகவும் பார்க்கப்படுகிறார். இதன் காரணமாகவே பிரசித் கிருஷ்ணாவை தாண்டி இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக இடம்பிடித்துள்ள 5 பேர் – லிஸ்ட் இதோ

பிரசித் கிருஷ்ணாவால் பின் வரிசையில் பேட்டிங்கில் சுத்தமாக கை கொடுக்க முடியாது. அதேவேளையில் ஹர்ஷித் ராணாவால் ஒரு சில சிக்ஸர்களை அடிக்க முடியும் என்பதனாலே அவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஹரிஷித் ராணாவிற்கு கௌதம் கம்பீர் தான் முழு ஆதரவுடன் அவருக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளார் என்ற பேச்சுக்களும் தொடர்ந்து இருந்து வருகிறது.

- Advertisement -