2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக இடம்பிடித்துள்ள 5 பேர் – லிஸ்ட் இதோ

Asia Cup Reserve
- Advertisement -

இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில வாரங்களில் துவங்கவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் என எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

ஆசிய கோப்பை தொடருக்கான 5 ரிசர்வ் வீரர்கள் :

செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடும் அறிவித்து வரும் வேளையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யும் நேற்று ஆகஸ்ட் 19-ஆம் தேதி 15 பேர் கொண்ட இந்திய அணியை வெளியிட்டிருந்தது.

- Advertisement -

இந்த இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இம்முறை 20 ஓவர் போட்டிகளாக ஆசிய கோப்பை தொடரானது நடைபெற இருப்பதினால் இந்த தொடரில் விளையாடும் வீரர்களே பெரும்பாலும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் விளையாடுவார்கள்.

எனவே இந்த ஆசிய கோப்பை தொடர்கான இந்திய அணித்தேர்வு பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த வகையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் ஒரு சில முக்கிய வீரர்களுக்கு இடம் கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்திருக்கும் வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடரின் 15 வீரர்களை தாண்டி 5 பேர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.

- Advertisement -

முதன்மை அணியில் ஏதேனும் வீரர்கள் தனிப்பட்ட முறையில் விலக நேர்ந்தாலோ அல்லது காயம் காரணமாக யாரேனும் வெளியேறினாலோ அவர்களுக்கு பதிலாக இந்த ரிசர்வ் வீரர்களை இந்திய அணி பயன்படுத்தும். அப்படி ரிசர்வ் வீரர்களாக இந்த தொடரில் இடம் பெற்றுள்ள ஐந்து வீரர்களாவது : யாஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரியான் பராக் இந்த ஐந்து வீரர்கள் தான் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவரை ஏன் சேக்கல?.. அவரு செம பார்ம்ல இருக்காரு – ஹர்பஜன் கருத்து

இதில் வேகப்பந்து வீச்சாளர், சுழற்பந்து வீச்சாளர், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என அனைத்து வகையான வீரர்களும் அடங்குவதால் இந்த ரிசர்வ் வீரர்கள் சரியான தேர்வாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் செப்டம்பர் 14-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement