- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2 ஓவருக்கு அப்றம் தான் அவர் இதை சொன்னாரு.. முதல் இந்திய வீரராக தனித்துவ சாதனை படைத்த ராணா பேட்டி

புனேவில் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 181/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே தலா 53 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 19.4 ஓவரில் 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 51 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய், ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதனால் 3 – 1* (5) என்ற கணக்கில் இந்தத் தொடரை கடைசி போட்டிக்கு முன்பாகவே வென்று இந்தியா அசத்தியுள்ளது.

- Advertisement -

தனித்துவமான சாதனை:

முன்னதாக இந்தப் போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய துபே கடைசி ஓவரில் தலையில் பவுன்சர் பந்தால் அடி வாங்கினார். அவருக்கு பதிலாக களமிறங்கிய ஹர்ஷித் ராணா 4 ஓவரில் 33 ரன்கள் கொடுத்து லியம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பேத்தல் உட்பட 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இத்தனைக்கும் இதற்கு முன் அவர் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடியதில்லை.

இருப்பினும் சப்ஸ்டிடியூட் வீரராக பாதியில் அவருக்கு அதிர்ஷ்டத்துடன் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சப்ஸ்டிடியூட் வீரராக அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த வாய்ப்பை தமக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கொடுத்ததாக ராணா கூறியுள்ளார்.

- Advertisement -

கம்பீர் கொடுத்த வாய்ப்பு:

இது பற்றி ராணா பேசியது பின்வருமாறு. “இது இப்போதும் எனக்கு கனவு அறிமுகப போட்டியாக இருக்கிறது. துபே பெவிலியன் திரும்பியப பின் 2 ஓவர்களுக்குப்பின் நான் சப்ஸ்டிடியூட் வீரராக விளையாட உள்ளது பற்றி கௌதம் கம்பீர் சார் சொன்னார். இந்தத் தொடரில் மட்டும் இல்லை. இந்த வாய்ப்புக்காக நான் நீண்ட காலமாக காத்திருந்து வருகிறேன்”

இதையும் படிங்க: இந்திய அணியில் போதுமான வாய்ப்பு கிடைக்காமல் போக காரணம் இதுதான் – ஓய்வுபெற்ற சாஹா நெகிழ்ச்சி

“அந்த வாய்ப்பில் நான் இங்கே தகுதியானவன் என்பதை நிரூபிக்க விரும்பினேன். நான் ஐபிஎல் தொடரில் நன்றாக பவுலிங் செய்துள்ளேன். அதையே இந்திய அணியிலும் பின்பற்ற விரும்புகிறேன்” என்று கூறினார். இதற்கிடையே ஆல் ரவுண்டரான துபேவுக்கு பதிலாக முழு நேர பவுலரான ராணா தேர்வு செய்யப்பட்டதற்கு முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -