போட்டியே எனக்கும் பும்ராவுக்கும் தான்.. அந்த சாதனையில் முந்திட்டேன் பாருங்க.. ஹர்ஷல் படேல் பெருமித பேட்டி

Harshal Patel
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 15ஆம் தேதி நடைபெற்ற 65வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. கௌகாத்தி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் சுமாராக விளையாடி ரியான் பராக் 48 ரன்கள் எடுத்த உதவியுடன் 145 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷாம் கரண் 63* (41) ரன்கள் அடித்து 18.5 ஓவரில் வெற்றி பெற வைத்தார். அதனால் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த பஞ்சாப் ஆறுதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மறுபுறம் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் இதையும் சேர்த்து கடைசி 4 போட்டிகளில் 4வது தோல்வியை பதிவு செய்து பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

போட்டியாளர் பும்ரா:
முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய வீரர் ஹர்ஷல் படேல் 4 ஓவரில் 28 ரன்கள் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்து பஞ்சாப் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்த 2 விக்கெட்டுகளையும் சேர்த்து இந்த வருடம் அவர் மொத்தமாக 22 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதனால் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் சாதனைப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ராவை (20) முந்திய ஹர்ஷல் படேல் ஊதா தொப்பியை தன் வசமாக்கியுள்ளார்.

இந்நிலையில் பும்ராவை தம்முடைய போட்டியாளராக நினைப்பதாக ஹர்ஷல் படேல் தெரிவித்துள்ளார். மேலும் அவரை பின்பற்றி அவரையே முந்தி ஊதா தொப்பியை வென்றுள்ளது பெருமிதம் அளிப்பதாக தெரிவிக்கும் ஹர்ஷல் படேல் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பும்ரா ஒரு போட்டியாளர் மட்டுமல்ல. நான் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர். நான் எப்போதும் அவரைப் போல் நன்றாக செயல்படுவதற்கு ஆசைப்படுகிறேன்”

- Advertisement -

“ஊதா நிற தொப்பியை வெல்வதற்கான போட்டியில் நாங்கள் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. யார்கர் பந்துகளை வெற்றிகரமாக செயல்படுத்துவது மிகவும் கடினமாகும். ஆனால் அந்தப் பந்தில் எனக்கு நிறைய தன்னம்பிக்கை இருக்கிறது. அதை அழுத்தமான சூழ்நிலையில் நான் வீச வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி மே 19ஆம் தேதி ஹைதராபாத்துக்கு எதிராக தங்களுடைய கடைசிப் போட்டியில் விளையாட உள்ளது.

இதையும் படிங்க: கவலைப்பாத்தீங்க.. ஒருமுறை போய்ட்டேன்னா வரமாட்டேன்.. மறுபடியும் பாக்க முடியாது.. விராட் கோலி உருக்கமான பேட்டி

ஆனால் மும்பை அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. எனவே அந்தப் போட்டியிலும் ஓரளவு நல்ல விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் பும்ராவை முற்றிலுமாக முந்தி ஊதா தொப்பியை ஹர்ஷல் படேல் வெல்வதற்கான பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் ஏற்கனவே 2021 சீசனில் ஊதா தொப்பியை வென்ற காரணத்தால் அவர் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement