கவலைப்படாதீங்க.. ஒருமுறை போய்ட்டேன்னா வரமாட்டேன்.. மறுபடியும் பாக்க முடியாது.. விராட் கோலி உருக்கமான பேட்டி

Virat Kohli 4
- Advertisement -

இந்திய வீரர் விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார். அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அத்துடன் உலகின் பல பேட்ஸ்மேன்கள் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் தடுமாறுவது வழக்கமாகும். ஆனால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டதட்ட 50 என்று அற்புதமான பேட்டிங் சராசரியை கொண்ட ஒரே வீரராக விராட் கோலி ஜொலித்து வருகிறார். மேலும் தரமான ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் 35 வயதிலேயே ஜாம்பவானுக்கு நிகராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

ஓய்வு திட்டம்:
இருப்பினும் கொஞ்சம் நங்கூரமாக விளையாடும் ஸ்டைலை கொண்டிருப்பதால் சுயநலத்துடன் சொந்த சாதனைக்காக விளையாடுகிறார் என்ற விமர்சனங்களை விராட் கோலி அவ்வப்போது சந்திப்பது வழக்கமாகும். அதன் உச்சமாக டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விடுங்கள் என்று சிலர் மனசாட்சியின்றி பேசுவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஆர்சிபி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விளையாட்டு வீரர்களான எங்களுடைய கேரியரும் ஒரு தேதியில் முடிவுக்கு வரும் என்பதை நாங்கள் அறிவோம். அதனால் நான் பின்னோக்கி வேலை செய்கிறேன். எனவே “ஒரு குறிப்பிட்ட நாளில் இதை செய்திருந்தால் என்ன” என்று நான் நினைத்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. ஏனெனில் நான் காலத்திற்கும் விளையாட முடியாது”

- Advertisement -

“எனவே குறையாக இருக்கும் எந்த விஷயத்தையும் செய்யாமல் விட்டுவிட்டு அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்ய மாட்டேன். ஒருமுறை எனது கேரியரை முடித்தவுடன் நான் போய் விடுவேன். அதன் பின் நீங்கள் என்னை நீண்ட காலம் பார்க்க மாட்டீர்கள். எனவே தற்போது விளையாடும் வரை என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்க விரும்புகிறேன். அது தான் என்னை தொடர்ந்து விளையாட வைக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக நாங்கள் அடைந்த தோல்விக்கு இதுதான் காரணம் – சஞ்சு சாம்சன் வருத்தம்

அந்த வகையில் தற்போது 35 வயதாகும் விராட் கோலி குறைந்தது இன்னும் 2 – 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் கிரிக்கெட் நீண்ட காலம் கழித்து சேர்க்கப்பட்டுள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்கு ஒலிம்பிக் வாரியம் விரும்புவதால் அதுவரை விராட் கோலி விளையாடுவார் என்று நம்பலாம்.

Advertisement