ஹர்ஷல் படேலின் அட்டகாசமான பேட்டிங்கிற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா ? – சுவாரசிய தகவல் இதோ

Harshal
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தது. துவக்க வீரர்களான ரோகித் சர்மா 56 ரன்களும், இஷான் கிஷன் 29 ரன்களை குவித்தனர். சூர்யகுமார் யாதவ் டக் அவுட், பண்ட் 4 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேற இந்திய அணி மிடில் ஆர்டரில் சரிவை சந்தித்தது. பின்னர் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 20 பந்துகளில் 25 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 15 பந்துகளில் 20 ரன்கள் குவிக்க 16 ஓவர்களில் இந்திய அணி 140 ரன்கள் எடுத்திருந்தது.

harshal 2

- Advertisement -

அதன் பின்னர் அவர்களும் ஆட்டமிழந்து வெளியேற இறுதி நான்கு ஓவர்களுக்கு பவுலர்கள் எவ்வாறு பேட்டிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி 4 ஓவர்களில் ஹர்ஷல் பட்டேல் 18 ரன்கள், தீபக் சாஹர் 21 ரன்கள் என ஓரளவு கைகொடுக்க கடைசி 4 ஓவர்களில் இந்திய அணிக்கு 44 ரன்கள் கிடைத்தது. இதன் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184 ரன்கள் என்ற பிரமாதமான ரன் குவிப்பை வழங்கியது.

இந்த போட்டியில் 8-ஆவது வீரராக களமிறங்கிய ஹர்ஷல் பட்டேல் பேட்டிங்கில் ஓரளவு கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சிறப்பாக விளையாடிய அவர் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து அமர்களப்படுத்தினார். இறுதியில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹிட் விக்கெட் மூலம் அதிர்ஷ்டவசமின்றி ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு இவ்வளவு பேட்டிங் திறமை இருக்கும் என்று யாரும் எதிர்பாராத வேளையில் அவரது பேட்டிங் திறன் குறித்து சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

harshal 3

அதன்படி ஹரியானா மாநில அணிக்காக கேப்டனாக விளையாடும் ஹர்ஷல் படேல் துவக்க வீரராக களம் இறங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டி20 கிரிக்கெட்டில் அவர் மூன்று முறை அரைசதம் அடித்துள்ளதால் நிச்சயம் அவரால் பேட்டிங் செய்ய முடியும் என்பது தெரியவந்துள்ளது. நேற்றைய போட்டியில் அவர் சிறப்பாக விளையாட முதல்தர கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாடியது காரணம் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : பிரமாண்டமான சிக்ஸரை அடித்த தீபக் சாஹரை நோக்கி சல்யூட் அடித்த ரோஹித் – வைரலாகும் வீடியோ

மேலும் போட்டி முடிந்து அவரது ஆட்டம் குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மாவும் ஹரியானா மாநில அணிக்காக ஹர்ஷல் படேல் ஓப்பனிங் விளையாடி வருவதை குறிப்பிட்டிருந்தார். 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 111 ரன்கள் மட்டுமே குவிக்க 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement